என் டி ஆர் மாவட்டம்
என்.டி.ஆர். மாவட்டம்
ఎన్టీఆర్ జిల్లా (தெலுங்கு) | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்பிரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | என். டி. ராமராவ் |
தலைமையிடம் | விஜயவாடா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. டில்லி ராவ், இ.ஆ.ப. |
• காவல்துறை ஆணையர், விஜயவாடா நகரம் | திரு. காந்தி ராணா டாட்டா, இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,315 km2 (1,280 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,18,591 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | ntr |
என்.டி.ஆர். மாவட்டம் ( NTR district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] ஆந்திரப் பிர்தேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என். டி. ராமராவ் நினைவாக இம்மாவட்டத்தின் பெயர் வைக்கப்பட்டது.
கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா வருவாய் கோட்டம், நந்திகாமா வருவாய் கோட்டம் மற்றும் திருவூர் வருவாய்க் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [4] [5]
3,316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22,18,591 ஆகும்.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]என் டி ஆர் மாவட்டம் விஜயவாடா, நந்திகாமா மற்றும் திருவூர் என மூன்று வருவாய்க் கோட்டகளையும், 20 மண்டல்களையும், 321 கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டத்தின் ஒரே மாநகராட்சி விஜயவாடா நகரம் ஆகும்.
மண்டலங்கள்
[தொகு]# | திருவூர் வருவாய் கோட்டம் | நந்திகாமா வருவாய் கோட்டம் | விஜயவாடா வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | ரெட்டிக்குடேம் | நந்திக்காமா | இப்ராகிம்பட்டினம் |
2 | திருவூர் | காஞ்சிகச்சேரியா | விஜயவாடா கிராமப்புறம் |
3 | விஸ்சன்னாபேட்டை | சந்தர்லாபடு | விஜயவாடா நகர்புறம் |
4 | காம்பாலகுடேம் | வீருல்லாபடு | விஜயவாடா நகர் மையம் |
5 | ஏ. கோண்டுரு | ஜெக்கையா பேட்டை | விஜயவாடா வடக்கு |
6 | வாத்சாவை | விஜயவாடா கிழக்கு | |
7 | பெனுகாஞ்சிபிரோலு | ஜி. கோண்டுரு | |
8 | மைலாவரம் |
ஆன்மீகம் & சுற்றுலா
[தொகு]கனக துர்கை கோயில், ஜெகதீஷ்வர கோயில், கொண்டப்பள்ளி கோட்டை மற்றும் பவானித் தீவு இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்கள் ஆகும்.
அரசியல்
[தொகு]இம்மாவட்டத்தில் விஜயவாடா மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.[6] அவைகள்:
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
69 | 118 | திருவூர் சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | 12 | 29 | விஜயவாடா மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
79 | 198 | விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | ||||
80 | 199 | விஜயவாடா மத்தியம் சட்டமன்றத் தொகுதி | |||||
81 | 200 | விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |||||
82 | 201 | மைலவரம் சட்டமன்றத் தொகுதி | |||||
83 | 202 | நந்திகாமா சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
84 | 203 | ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://ntr.ap.gov.in/about-district/whos-who/
- ↑ 2.0 2.1 https://ntr.ap.gov.in/demography/
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ Sharma, Ravi (26 January 2022). "Andhra Pradesh Cabinet clears the formation of 13 new districts". Frontline (in ஆங்கிலம்). Archived from the original on 31 January 2022. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.