கொண்டப்பள்ளி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kondapalli Fort
பகுதி: கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
Vijayawada-Kondapalli Quilla.jpg
Palace view at Kondapalli Kota or Fort
Fourcourt.JPG
Kondapalli Fort is located in ஆந்திரப் பிரதேசம்
Kondapalli Fort
Kondapalli Fort
ஆள்கூறுகள் 16°37′31″N 80°31′50″E / 16.625283°N 80.530667°E / 16.625283; 80.530667ஆள்கூறுகள்: 16°37′31″N 80°31′50″E / 16.625283°N 80.530667°E / 16.625283; 80.530667
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது ஆந்திரப் பிரதேச அரசு
நிலைமை Reconstructed
இட வரலாறு
கட்டிய காலம் 14th century
கட்டியவர் முசுனூரி நாயக்கர்கள்
கட்டிடப்
பொருள்
கருங்கல் (பாறை) Stones and lime mortar
சண்டைகள்/போர்கள் முசுனூரி நாயக்கர்கள், கஜபதி பேரரசு of Orissa, கோல்கொண்டா சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, சுல்தான் of கோல்கொண்டா (ஐதராபாத் நிசாம்) and the British
நிகழ்வுகள் 16 th century Kondapally pedda Bailu or Plains Ply Ground Of Battles Between Vellanki Rajas of Rayudu and Bahamanis of Golconda With support of Paritrala Jupally Cheiftains
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் Abondned

கொண்டப்பள்ளி கோட்டா என்று அழைக்கப்படும் கொண்டப்பள்ளி கோட்டை கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது . கொண்டப்பள்ளி கோட்டையை முசுனூரி நாயக்க மன்னர்கள் கட்டியுள்ளனர்.

இந்தியாவின் ஆந்திராவின் இரண்டாவது பெரிய நகரமான விசயவாடாவுக்கு அருகில் கொண்டப்பள்ளி கோட்டை அமைந்துள்ளது. இது விசயவாடா அருகே கிருஷ்ணா மாவட்டத்தில் கொண்டப்பள்ளிக்கு மேற்கே அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

கிருஷ்ணா மாவட்டத்தில் கொண்டப்பள்ளி என்று அழைக்கப்படும் பிரதான மலைத்தொடரில் விசயவாடா நகரின் மேற்கே இந்த கோட்டை அமைந்துள்ளது. மலைத்தொடர், சுமார் 24 கிலோமீட்டர்கள் (15 mi) நீளம், நந்திகம மற்றும் விசயவாடா இடையே நீண்டுள்ளது. இந்த மலைத்தொடரில் உள்ள வனப்பகுதி 'பொனுகு' என்று அழைக்கப்படும் ஒரு வகை லைட்வுட் மரம் மூலம் நிறைந்துள்ளது. இது பிரபலமான கொண்டப்பள்ளி பொம்மைகளின் உற்பத்திக்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது.[1] கொண்டப்பள்ளி கோட்டை மற்றும் அருகிலுள்ள குன்றுகளை சுற்றி கீழாநெல்லி, நெல்லி, நிலவேம்பு, வெப்பாலை, கொழுஞ்சி, உசில மரம் என்ற அரப்பு, காவலம், வாய் மரம் போன்ற மருத்துவ தாவரங்கள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன.[2] மலைத் தொடர் சார்னகைட் பாறை, சில பைராக்சீன் பரல் கட்டமைப்பு உருமாற்றப் பாறை, கருங்கல் (பாறை), இலைகளுடையஉருமாற்றப் பாறை, பற்றவைக்கப்பட்ட பாறை மற்றும் சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை ஆகியவற்றால் ஆனது.[3]

வரலாறு[தொகு]

முசுனூரி நாயக்கர்களால் கொண்டப்பள்ளி கோட்டை கட்டப்பட்டுள்ளது. கி.பி 1370 இல் முசுனூரி நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி 1370 இல் கொண்டவீடு ரெட்டிப் பேரரசு கோட்டையை ஆக்கிரமித்தார்கள். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒரிசாவின் சிம்மாசனத்திற்காக ஹம்விரா தனது சகோதரர் புருஷோத்தத்துடன் போராட வேண்டியிருந்தது. இந்த போரில் அவர் பாமினி சுல்தானின் உதவியை நாடினார். இதனால் தனது சகோதரரை தோற்கடித்து ஒரிசா இராச்சியத்தின் சிம்மாசனத்தை 1472 இல் கைப்பற்றினார். இதற்காக அவர் பாமினி சுல்தானுக்கு கொண்டப்பள்ளியையும் ராஜமுந்திரியையும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, புருஷோத்தம் 1476 இல் ஹம்விராவைத் தோற்கடித்து ஒரிசாவின் அரியணையைக் கைப்பற்றினார். ஆனால் 1476 ஆம் ஆண்டில், பாமினி இராச்சியத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கொண்டப்பள்ளியில் ஒரு புரட்சி தொடங்கியது என்றும், கொண்டப்பள்ளியில் காரிசன் செய்த கிளர்ச்சி கோட்டையை "ஹேமர் ஒரியா" என்றழைக்கப்பட்ட ஹம்விராவுக்குக் கொடுத்தது என்றும் கூறப்படுகிறது.[4]

புருஷோத்தம் ராஜாவானதும், மூன்றாம் பாமினி சுல்தான் என்பவரிடமிருந்து கொண்டப்பள்ளி மற்றும் ராஜமுந்திரியை திரும்பப் பெற முயன்றார். ஆனால் அவர் ராஜமுந்திரி மீது முற்றுகையிட்டபோது, சில அறியப்படாத காரணங்களால் அவர் சுல்தானுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் விளைவாக பாமினி மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களிடையே சிறிய போர்கள் ஏற்பட்டன. 1481 ஆம் ஆண்டில், சுல்தான் மகம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, பாமினி சுல்தானியத்தில் ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி புருஷோத்தம் சுல்தானின் மகனான மகம்மது ஷாவுடன் சண்டையிட்டு ராஜமுந்திரி மற்றும் கொண்டப்பள்ளி கோட்டையினைக் கைப்பற்றினார். கஜபதி புருஷோத்தம் தேவா 1497 இல் இறந்தார், அவருக்குப் பிறகு அவரது மகன் கஜபதி பிரதாருத்ரா தேவா அரியணை ஏறினார்.[4]

1509 ஆம் ஆண்டில், கஜபதி பிரதாருத்ரா தேவா விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயருக்கு எதிராக ஒரு போரைத் தொடங்கினார். ஆனால் வங்காளத்தைச் சேர்ந்த சுல்தான் அல்லாவுதீன் உசான் ஷாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கஜபதி வடக்கே பின்வாங்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக கிருஷ்ணதேவராயர் ஜூன் 1515 இல் கஜபதி ஆக்கிரமிப்பில் இருந்த கொண்டப்பள்ளியை எளிதாக வெற்றி பெற்றார். 1519 இல் நடந்த கடைசி போரில், கிருஷ்ணதேவராயர் மீண்டும் ஒரிசா ஆட்சியாளரை தோற்கடித்தார். கொண்டப்பள்ளி கோட்டை மிகவும் வலுவாக இருந்ததால், கோட்டையை மூன்று மாதங்கள் முற்றுகையிட்ட பின்னர், கோட்டையின் கட்டுப்பாட்டைப் பெற கிருஷ்ணதேவராயர் தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் போரைத் தொடர்ந்து, கிருஷ்ணதேவராயர் கஜபதி பிரதாருத்ரா தேவாவின் மகள் கலிங்க குமாரி ஜெகன்மோகினியை மணந்தார். கிருஷ்ணா ஆற்றின் தெற்கு எல்லை வரையிலான அனைத்து நிலங்களையும் ஒரிசாவுக்கு மீட்டெடுப்பதற்கான ஒப்பந்ததம் கையெழுத்தானது, அதில் கொண்டப்பள்ளி அடங்கும்.[4][5]

ஆனால், விஜயநகர சக்கரவர்த்தியுடனான ஒப்பந்தத்தின் பின்னர், 1519 மற்றும் 1525 க்கு இடையில், கோல்கொண்டாவின் சுல்தானான சுல்தான் குலி குதாபின் படையெடுப்பிற்கு எதிராக கஜபதி பிரதாருத்ரா தேவா தனது பிரதேசத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் இறுதி தாக்குதலில், 1531 இல், கொண்டப்பள்ளி கோல்கொண்டா சுல்தானின் ஆட்சியின் கீழ் வந்தது. கோல்கொண்டா சுல்தான்களுடனான போரை ஒரிசா இராச்சியத்தின் புதிய ஆட்சியாளரான கோவிந்தா பித்யாதர் தொடர்ந்தார். அவர் கஜபதி பிரதாபிருத்ரா தேவாவுக்குப் பின் 1533 இல் இறந்தார். இறுதியாக சுல்தானுடனான ஒரு ஒப்பந்தத்துடன் முடிந்தது.[4]

இந்த பகுதி 17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசின் கீழ் வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாய சாம்ராஜ்யம் சிதைந்த பின்னர், நிசாம் உல்-முல்க், ஐதராபாத் நிசாம் ஆனதும் சுதந்திரத்தை அறிவித்து, அந்தப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்பகுதி ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழ் இருந்தது, நிசாம் அலி மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இடையே ஒரு எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12, 1766 இல் கையெழுத்திடப்பட்டது. இதன் விளைவாக பிரதேசத்தின் மானியத்திற்கு பதிலாக நிறுவனம் 90,000 பிரித்தானிய பவுண்டுகள் ஆண்டு செலவில் நிசாமின் உதவிக்காக கோட்டையில் துருப்புக்களை பாதுகாக்க ஒப்புக்கொண்டது. 1766 ஆம் ஆண்டில் ஜெனரல் கெயிலாட்டின் கீழ் ஆங்கிலேயர்கள் கோட்டையைத் தாக்கி அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர் என்றும் கூறப்படுகிறது.[6]

இரண்டாவது ஒப்பந்தம் 1768 மார்ச் 1 அன்று கையெழுத்தானது. இதன் கீழ் முகலாய ஆட்சியாளர் ஷா ஆலம் ஆங்கிலேயர்களுக்கு வழங்கிய மானியத்தை நிசாம் அங்கீகரித்தது. இருப்பினும், 1823 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய நிறுவனம் நிசாமிடமிருந்து முற்றிலும் வாங்கியதன் கீழ் சர்கார்களின் மொத்த கட்டுப்பாட்டை மீட்டெடுத்தது. ஆனால், நட்பின் சைகையாக, பிரிட்டிஷ் (அப்போதைய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ) நிசாமுக்கு 50,000 பவுண்டுகள் கொடுப்பனவு கொடுக்க ஒப்புக்கொண்டது. .[6]

ஆரம்ப ஆண்டுகளில், கோட்டை ஒரு வணிக மையமாக பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1766 இல் ஆங்கிலேயர்கள் கோட்டையை கைப்பற்றிய பின்னர் அது ஒரு இராணுவ பயிற்சி தளமாக மாற்றப்பட்டது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Glorious Krishna: District Profile". Krishna district:Government of Andhra Pradesh. 2010-03-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nature's pharmacy at hand". 2008-12-29. 2012-11-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-26 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. A.T.Rao. "Allanite from the Kondapalli charnockites, Krishna District, Andhra Pradesh, India" (PDF). Department of Geology, Andhra University. 21 July 2015 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 2009-10-26 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 4.3 "Detail History of Orissa: Early Period to 1568 AD". Government of Orissa and National Informatics Centre. 25 April 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-25 அன்று பார்க்கப்பட்டது.
  5. Mysore State Gazetteer: Bellary. Director of Print., Stationery and Publications at the Govt. Press. https://books.google.com/?id=RbG1AAAAIAAJ&q=History+of++Kondapalli+Fort&dq=History+of++Kondapalli+Fort. பார்த்த நாள்: 2009-10-25. 
  6. 6.0 6.1 "The Devil's Peak, Kondapalli". British library Online. 2009-10-24 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Glorious Krishna: District: Tourism". Krishna district:Government of Andhra Pradesh. 2010-03-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டப்பள்ளி_கோட்டை&oldid=3551653" இருந்து மீள்விக்கப்பட்டது