விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயவாடா மேற்கு
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்என் டி ஆர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்232,555
இட ஒதுக்கீடுGeneral
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்வெள்ளம்பள்ளி சிறீனிவாசு
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு1967

விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி அல்லது (பவானி புரம் ) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] எல்லை நிர்ணய உத்தரவுகளின்படி (1967), தொகுதி உருவாக்கப்பட்டது.[2] இது திருவூர், விஜயவாடா மத்திய, விஜயவாடா கிழக்கு, மைலவரம், நந்திகாமம் மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் தொகுதிகளுள் ஒன்றாகும்.[3] 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேலம் பள்ளி சீனிவாச ராவ் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[4] 25 மார்ச்சு 2019-ன் படி இத்தொகுதியில் மொத்தம் 232,555 வாக்காளர்கள் உள்ளனர்.[5]

மண்டலங்கள்[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதியில் உள்ளமண்டலம் மற்றும் பகுதிகள்:[3]

மண்டல்
விஜயவாடா நகர்ப்புற மண்டலம் (பகுதி) விஜயவாடா நகர்ப்புறம் (மாநகரப் பகுதி) (பகுதி) விஜயவாடா (மாநகர பகுதி எண். 1 முதல் 13, 15 முதல் 19, 75 மற்றும் 76

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினர் கட்சி பதவிக்காலம் மேற்கோள்கள்
வெள்ளம்பள்ளி சீனிவாச ராவ் ஒய்.எசு.ஆர்.கா. (2019–முதல்) [6]
ஜலீல் கான் ஒய்.எசு.ஆர்.கா. (2014–2019) [7]
வெள்ளம்பள்ளி சீனிவாச ராவ் பிரசா ராச்யம் கட்சி (2009–2014) [8]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]