வேதவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதவதி என்பது இந்தியாவில் ஓடும் ஆற்றின் பெயர். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கிடையில் பாய்கிறது. இதன் கரையோரமாக, ஹொசதுர்க்கை வட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோயில் புகழ்பெற்றதாகும். இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாணி விலாச சாகரம் அணைக்கட்டு ஒரு நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்டதாகும். இந்த ஆறு துங்கபத்திரை ஆற்றின் துணையாறு ஆகும். இவ்வாற்றினைச் சுற்றியுள்ள ஊரினர் இதனை புண்ணிய பூமி என்று அழைக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதவதி_ஆறு&oldid=2095345" இலிருந்து மீள்விக்கப்பட்டது