சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெல்லூர் மாவட்டம்
—  மாவட்டம்  —
நெல்லூர் மாவட்டம்
இருப்பிடம்: நெல்லூர் மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 14°26′N 79°58′E / 14.43°N 79.97°E / 14.43; 79.97ஆள்கூறுகள்: 14°26′N 79°58′E / 14.43°N 79.97°E / 14.43; 79.97
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் நெல்லூர் மாவட்டம்
ஆளுநர் Biswabhusan Harichandan[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை

அடர்த்தி

26,68,564 (2001)

204/km2 (528/sq mi)

பாலின விகிதம் 1000/986 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13,076 சதுர கிலோமீட்டர்கள் (5,049 sq mi)

19 மீட்டர்கள் (62 ft)

இணையதளம் http://nellore.nic.in/


சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் நெல்லூரில் உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் [3] 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் [4] . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பெரும்பாலோர் (70.5%) தெலுங்கு பேசுகின்றனர், 28.9% தமிழ் பேசுகின்றனர் [5] . தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.

நெல், ஊர் ஆகிய இரு சொற்கள் இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், வெங்கடகிரி, காவலி, கோவூர் என்பன மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கு எல்லையாக தமிழ்நாடும் தென்மேற்கு எல்லையாக சித்தூர் மாவட்டமும் மேற்கு எல்லையாக ஒய்.எஸ்.ஆர் மாவட்டமும் வடக்கு எல்லையாக பிரகாசம் மாவட்டமும் உள்ளன. எசரா மாவட்டம் வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலுவின் நினைவாக 'சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது. [6]

இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது. [7]. மாவட்டத்தின் நடுவில் வட பெண்ணையாறு பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.

இம்மாவட்டத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை நெல்லூர், காவலி,கூடூர், நாயுடுபேட்டை, ஆத்மகூர்

இந்த மாவட்டம் முழுவதும் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

இந்த மாவட்டம் ஆந்திர சட்டமன்றத்திற்கான பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை காவலி, ஆத்மகூர், கோவூர், நெல்லூர் நகரம், நெல்லூர் ஊரகம், சர்வபள்ளி, கூடூர், சூள்ளூர்பேட்டை, வெங்கடகிரி, உதயகிரி ஆகியன.

இந்த மாவட்டத்தை 46 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[8]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1111–1112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  4. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  5. Gazetteer of the Nellore District: brought up to 1938
  6. "The martyr of Telugu statehood". The Hindu (Chennai, India). 2002-11-11. http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm. 
  7. NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts. rd.ap.gov.in
  8. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Nellore.pdf நெல்லூர் மாவட்டத்தின் மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்)