உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கடகிரி

ஆள்கூறுகள்: 13°58′00″N 79°35′00″E / 13.9667°N 79.5833°E / 13.9667; 79.5833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடகிரி
వెంకటగిరి
வெங்கடகிரி is located in ஆந்திரப் பிரதேசம்
வெங்கடகிரி
வெங்கடகிரி
ஆந்திராவில் வெங்கடகிரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°58′00″N 79°35′00″E / 13.9667°N 79.5833°E / 13.9667; 79.5833
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
அரசு
 • நிர்வாகம்வெங்கடகிரி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்25.43 km2 (9.82 sq mi)
ஏற்றம்
60 m (200 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்51,708
 • அடர்த்தி2,000/km2 (5,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

வெங்கடகிரி ( Venkatagiri ) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது வெங்கடகிரி மண்டலத்தின் நகராட்சியும் வெங்கடகிரி மண்டலத் தலைமையகமும் ஆகும். [3] வெங்கடகிரியின் பழைய பெயர் "காளி மில்லி".  வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரம் கைத்தறி பருத்தி புடவைகளுக்கு பிரபலமானது. இது இந்திய குடியரசில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.

வரலாறு[தொகு]

வெங்கடகிரி முதலில் 17ஆம் நூற்றாண்டில் வரை காளி மில்லி என அறியப்பட்டது. விஜயநகர பேரரசின் கீழ் கோபுரி பாளையக்காரர்களால் ஆளபட்டு வந்தது. விஜயநகரத்தின் அரவிடு வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் பெத்த வெங்கடபதி ராயனின் உறவினரும் மதுராந்தகத்தின் நாயக்கனும் வேலுகோட்டி ராஜாவின் மருமகனுமான இரெச்செர்லா வெங்கடாத்ரி நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர், இந்த கிராமத்திற்கு வெங்கடகிரி என்று பெயர் மாற்றப்பட்டது. [4] 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேலகோட்டி ஆட்சியாளர்கள் தங்கள் தலைநகரை வெங்கடகிரிக்கு மாற்றினர். அது இந்தியாவின் சுதந்திரம் வரை ஒரு ஜமீந்தாரியாக நீடித்தது. [5] இது கைவல்ய ஆறு மற்றும் கோதேரு ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ளது.

கோயில்கள்[தொகு]

வெங்கடகிரியில் உள்ள ஸ்ரீகாசி விசுவநாத சுவாமி கோயில்.

வெங்கடகிரியில் காசி விசுவநாதர் கோயில், இராமலிங்கேசுவர சுவாமி கோயில், பிரசன்னா வெங்கடேசுவர சுவாமி கோயில், பொலேரம்மா கோயில் மற்றும் பெருமல்ல சுவாமி கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.

நிலவியல்[தொகு]

வெங்கடகிரி 13.9667 ° வடக்கிலும் 79.5833 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [6] இது சராசரியாக 60 மீட்டர் (197 அடி) உயரத்தில் உள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[7] வெங்கடகிரி வட்டத்தில் 200,000 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. இது 58 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. 6-1-2005இல் நகராட்சியாக மாறியது. நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 52,478 ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். நகராட்சியின் மொத்த பரப்பளவு 23.50 கிமீ ஆகும்.

நிர்வாகம்[தொகு]

வெங்கடகிரி நகராட்சி 2005 ஆம் ஆண்டில் தரம் III நகராட்சியாக உருவாக்கப்பட்டது . மேலும், 25.43 கிமீ 2 (9.82 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. [8]

பொருளாதாரம்[தொகு]

நகரத்திலும் அதைச் சுற்றிலும் நெய்யப்பட்ட வெங்கடகிரி புடவை ஆந்திராவின் புவியியல் சார்ந்த குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் பொருட்களின் புவியியல் குறிகாட்டிகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 இல் பதிவு செய்யப்பட்டது . [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  3. "Revenue Setup". Official website of Sri Potti Sri Ramulu Nellore District. National Informatics Centre. Archived from the original on 1 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
  4. ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. (1922). A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS. ADDISON PRESS, Madras. pp. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785519483643.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  6. "Falling Rain Genomics, Inc - Venkatagiri Town". Archived from the original on 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  7. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  8. "Brief about Municipality". Commissioner and Director of Municipal Administration. Government of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  9. "State Wise Registration Details of G.I Applications" (PDF). Geographical Indication Registry. p. 5. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வெங்கடகிரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடகிரி&oldid=3572203" இலிருந்து மீள்விக்கப்பட்டது