தகதர்த்தி
தகதர்த்தி Dagadarthi | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
வட்டம் (தாலுகா) | தகதர்த்தி |
மொழிகள் | |
• Official | தெலுங்கு |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
தகதர்த்தி (Dagadarthi) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]
== புவியியல் அமைப்பு == 14° 42′ 28″ வடக்கு 79° 51′ 2″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தகதர்த்தி கிராமம் பரவியுள்ளது.
வருவாய் பதிவுகள்[தொகு]
சொத்துகள் வாங்குதல் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நெல்லூர் மாவட்டத்தின் காவலி வருவாய் வட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதிவாளர் அலுவலகம் அல்லூர் கிராமத்தில் உள்ளது.
அரசியல்[தொகு]
காவலி சட்டப் பேரவைத் தொகுதியில் தகதர்த்தி இடம்பெற்றுள்ளது.
பொருளாதாரம்[தொகு]
விவசாயம் கிராம மக்களின் முக்கியமான முதல்நிலைத் தொழிலாக உள்ளது. மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்த்து இரண்டாம் நிலைத் தொழிலாக கணினி மென்பொருள் தொழில் இங்கு வளர்ந்து வருகிறது.
நீர்ப்பாசனம்[தொகு]
இம்மண்டலத்தின் விவசாய நிலங்கள் கனிகிரி நீர்த்தேக்கம் மூலமாக நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. சோமசீலா அணை மற்றும் நீர்த்தேக்கத்தில் இருந்து காவலி மற்றும் வடக்கு துரிமெரலா கால்வாய்கள் மூலமாக கனிகிரி நீர்த்தேக்கம் தண்ணீரைப் பெறுகிறது.
விமான நிலையம்[தொகு]
புதியதாக விமான நிலையம் கட்டுவதற்கு தகதர்த்தியில் சுமார் 2600 ஏக்கர் நிலப்பரப்பிலான இடம் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Sub-Districts". Census of India. 2007-03-26 அன்று பார்க்கப்பட்டது.