ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா பத்மினி ஆர். முத்துராமன் |
வெளியீடு | ஆகத்து 15, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4471 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராமன் எத்தனை ராமனடி (Raman Ethanai Ramanadi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பத்மினி, ஆர். முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
கதைச் சுருக்கம்
[தொகு]பூங்குடி என்ற கிராமத்தில் வயதில் இளைஞனாகவும் அறிவில் குழந்தையாகவும் ஒருவன் வாழ்ந்து வந்தான்- அவன்தான் சாப்மாட்டு ராமன்.
நிலவைப் பிடித்து விளையாட விரும்பும் குழந்தையைப் போல், அந்த அப்பாவி ஒரு பெரிய இடத்துப் பெண்ணை விரும்பினான். ஏழைக்குக் காதல் வரக்கூடாதா? கூடாது என்று சொன்னான் மைனர் ராஜரத்தினம். உயர்வு தாழ்வு என்ற அந்தஸ்தை உடைத்தெறியும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்னாள் ராஜரத்தினத்தின் தங்கை தேவகி. தேவகியின் அந்த வார்த்தைகள் சாப்ட்டு ராமனை ஓர் லட்சிய ராமனாக மாற்றியது.
ஊரை விட்டுச் சென்ற சாப்பாட்டு ராமன் தன் லட்சியத்தில் வெற்றி பெற்று பிறந்த பூமிக்கு ஜெயராமனாக திரும்பி வந்தான்–எப்படி? அந்த ஜெயராமன் கல்யாண ராமனாகாமலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானான் –எதற்காக?
உடலை மட்டும் விரும்பி உறவு கொள்ளுதற்கு பெயர் காமம் - உள்ளத்தை விரும்பி, உயிரையே கொடுப்பதற்கு பெயர் காதல், அப்படிப்பட்ட உன்னதமான காதலை தன் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு நல்லவனின் கதைதான் - ராமன் எத்தனை ராமனடி.
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - சாப்பாட்டு ராமன்/நடிகர் விஜயகுமாா்/வீரசிவாஜி ஓரங்கநாடகம்
- கே. ஆர். விஜயா - தேவகி
- முத்துராமன் - முத்து
- நம்பியார் - ராஜரத்னம்
- எஸ்.வி.ராமதாஸ் - பாலு
- பத்மினி - பத்மினி (கௌரவ வேடம்)
- வி. நாகையா - நாகையா (கௌரவ வேடம்)
- எஸ். என். லட்சுமி - ராமு பாட்டி
- காத்தாடி ராமமூர்த்தி
- கவுண்டமணி - பள்ளி வாகன ஓட்டுநர்
- மாஸ்டர் பிரபாகரன் - கோபி
- எம். பானுமதி - சுமதி
- ஆலம் - நடனம்
பாடல்கள்
[தொகு]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | அம்மாடி பொண்ணுக்கு | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
2 | சித்திரை மாதம் | பி. சுசீலா | |
3 | நிலவு வந்து பாடுமோ | பி. சுசீலா | |
4 | அம்மாடி பொண்ணுக்கு (சோகம்) | டி. எம். சௌந்தரராஜன் | |
5 | சேரன் சோழன் பாண்டியர் | எல். ஆர். ஈஸ்வரி, எம்.மாதுரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பொன்விழா படங்கள்: ராமன் எத்தனை ராமனடி" [Golden Jubilee movies: Raman Ethanai Ramanadi]. தினமலர். 1 July 2020. Archived from the original on 14 August 2020. Retrieved 14 August 2020.
- ↑ ராம்ஜி, வி. (29 October 2018). "ஒரேநாளில் ரெண்டு சிவாஜி படங்கள் – எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்; 48 வருடங்கள்!" [Two Sivaji films in one day – Engirundho Vandhal, Sorgam; 48 years!]. Kamadenu. Archived from the original on 7 November 2018. Retrieved 4 April 2019.
- ↑ "செல்லுலாய்ட் பெண்கள்" [Celluloid girls]. தினகரன். 6 May 2019. Archived from the original on 30 April 2020. Retrieved 18 August 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராமன் எத்தனை ராமனடி
- 1970 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்