கே. ஆர். விஜயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆர். விஜயா
பிறப்புதெய்வநாயகி
மார்ச்சு 4, 1947 (1947-03-04) (அகவை 76)
திருச்சூர் கேரளம்,
 இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1963–நடப்பு
வாழ்க்கைத்
துணை
எம். வேலாயுதம் (1966-2012) இயற்கை மரணம் அடைந்தாா்
பிள்ளைகள்ஹேமலதா (பி.1967)
உறவினர்கள்உடன்பிறந்தோர்:-
கே.ஆர்.வத்சலா
கே.ஆர்.சாவித்திரி
கே.ஆர்.சசிகலா
கே.ஆர்.ராதா
கே.ஆர்.நாராயணன்

கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.[1]

வாழ்க்கை குறிப்பு[தொகு]

 • கே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திரபிரதேசத்தையும், தாயார் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் தெய்வநாயகி என்ற இயற்பெயர் உடன் முதல் மகளாக பிறந்தார். இவருக்கு வத்சலா, சாவித்திரி, சசிகலா, ராதா என்கிற நான்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனர். இவர் தந்தை திருவனந்தபுரத்தில் நகை வியாபாரம் செய்து வந்தார். பின்பு நகை வியாபாரத்தில் ஏற்பட்ட பெருத்த நட்டத்தால், பின்பு தமிழ்நாட்டில் உள்ள பழநி முருகன் கோவிலில் இவரது தந்தை ராமச்சந்திரன் கோவில் அலுவலராக பணியாற்றும் போது கே. ஆர். விஜயா குடும்பம் பழநியில் குடியேறியது.
 • மேலும் இங்கு தான் கே. ஆர். விஜயா அவர்களுக்கு தனது விருப்ப கடவுளான முருகன் மீதும் தனது வாழ்க்கையை தீர்மானித்த நாடக நடிப்பின் மேல் உள்ள ஆசையும் வளர தொடங்கியது.
 • ஆரம்ப காலத்தில் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதா வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தார். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சேர்த்து கே.ஆர்.விஜயா என்று மாற்றி கொண்டார்.
 • இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.
 • எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் இவர் நடித்த ஆரம்பகாலத்தில் பல வில்லன் நடிகர்களான ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், கே. பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளார். பின்பு நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய்ஶ்ரீனிவாசன், ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளார்.
 • தமிழ்திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். தமிழில் விஜயபுரி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவார். பின்பு தற்போது தமிழில் பல சின்னத்திரை நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
 • இவர் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு அன்றைய பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளார்.
 • நடிகை கே. ஆர். விஜயாவிற்கு தமிழ் திரையுலகில் முதல் முறையாக 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த சாண்டல்யனின் ஜீவ பூமி என்ற படத்தில் நாக கன்னியாக நாகமாக மாறி இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த சரோஜா தேவியை சீண்டும் நாகமாக விஜயா நடித்திருந்தார். இதுவே அவர் தோன்றி நடித்த முதல் திரைப்படம் ஆகும். ஆனால் அப்படம் வெளிவராமல் போனது.

திரைப்பட அனுபவங்கள்[தொகு]

 • திரைக்கு வருவதற்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
 • அதில் மிகவும் பிரபலமான தமிழக அரசால் காசநோய் விழிப்புணர்வு குறித்த எமர்ஜென்சி என்ற நாடகத்தில் கே. ஆர். விஜயா நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது.
 • அதை தவிர உட்வாஸ், டர்மிக் பவுடர், சிம்சென் சாக்லேட், மூவ் ஆயில்மென்ட் ஆகிய விளம்பர படத்தில் நடித்துள்ளார். என்றாலும் மக்களிடையே தோன்றிய பிரபலமாக மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் கோபகாரி சுமதியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு புகழை தேடித்தந்தது.
 • அந்த மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் நடிகை சரோஜாதேவி உடன் இணைந்து நடித்த கே. ஆர். விஜயா (சுமதி) மகளாகவும் சரோஜாதேவி (பாமா) தாயாகவரும் அந்த காட்சியில் சரோஜாதேவி அவர்கள் அய்யோ அப்பா இடுப்பேலாம் வலிக்குதுடி எதாவது மருந்து இருந்த தேச்சுவிடு என்பார். உடனே கோபகாரி சுமதியாக வரும் கே. ஆர். விஜயா அவர்கள் மூவ் ஆயில்மென்ட் வைத்து தனது அம்மாவான சரோஜாதேவி இடுப்பில் தேச்சுவிடும் போது கோபத்தில் ஓங்கி குத்துவிடுவார். உடனே சரோஜாதேவி அப்பா ரோம்ப நல்லாருக்குடி என்று கூறியவுடன் அதில் கே. ஆர். விஜயா பேசும் வசனமான மூவ் ஆயில்மென்ட் திஸ் சூப்பர் மூவ்மென்ட் என்று பேசும் வசனம் அப்போது பிரபலமான விளம்பரமாக பார்க்கபட்டது
 • இந்த விளம்பரமானது கே.ஆர்.விஜயா திரைக்கு அறிமுகம் ஆகும் நேரம் என்பதால் ரசிகர்கள் பல முன்னனி கதாநாயகிகுக்கு எல்லாம் முதுகில் குத்தி சுளுக்கு எடுத்து விட்டு முன் அணிக்கு வந்த கதாநாயகி என்று ரசிகர்கள் இடையே பெயர் எடுத்தார்.
 • நான் ஆணையிட்டால் படத்தில் எம். ஜி. ஆர் அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடித்திருந்தார். அந்த துப்பாக்கிச் சூட்டை படத்தின் கதையிலும் காட்சியாக்க விரும்பிய படத்தின் தாயாரிப்பாளர் ஆர். எம். வீரப்பன் படத்தில் அந்த காட்சியில் எம். ஜி. ஆர் படத்தின் இறுதியில் போலீசாரிடம் தப்பி ஒடி வரும் போது எம்.ஜி.ஆரின் நெஞ்சை நோக்கி சுடுவதாக படமாக்கி இருந்தார். குண்டடி பட்டவுடன் கே. ஆர். விஜயாவிடம் வந்து குண்டை உடலில் இருந்து நீக்க சொல்வார். அப்போது கத்தியால் சமார்த்தியமாக அவரது நெஞ்சில் உள்ள குண்டை நீக்குவதாக முழுமையாக காட்சியாக்கினார். இது தணிக்கையில் நிராகரிக்கபட்டது.
 • அதனால் இந்த குண்டடி காட்சியை மாற்றி படத்தில் எம்.ஜி.ஆர்க்கு பதிலாக அவருடன் இணைந்து போலீசாரிடம் இருந்து தப்பி ஒடும் காட்சியில் சரோஜாதேவியும் சேர்த்து நடித்திருந்தார். அதை வைத்து எம்.ஜி.ஆர் நெஞ்சில் மீது விழும் குண்டடி காட்சியை மாற்றி சரோஜாதேவியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து அதை கே.ஆர்.விஜயா கத்தியால் அந்த குண்டை எடுப்பதாக மாற்றி காட்சி ஆக்கினார் படத்தின் இயக்குனரான சாணக்யா.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

 1. அக்கா
 2. அக்கா தங்கை
 3. அவள் சுமங்கலிதான்
 4. இரு மலர்கள்
 5. எதிரொலி
 6. திருடன்
 7. தங்கை
 8. பாலாடை
 9. நெஞ்சிருக்கும் வரை
 10. தவப்புதல்வன்
 11. பாரத விலாஸ்
 12. தங்கப்பதக்கம்
 13. கிரஹப்பிரவேசம்
 14. நாம் பிறந்த மண்
 15. ஜஸ்டிஸ் கோபிநாத்
 16. ஜெனரல் சக்ரவா்த்தி
 17. திரிசூலம்
 18. கல்தூண்
 19. ஹிட்லர் உமாநாத்
 20. கண்ணன் கருணை
 21. கண்ணே பாப்பா
 22. கந்தன் கருணை
 23. கல்யாண ஊர்வலம்
 24. கற்பகம்
 25. காட்டு ராணி
 26. குறத்தி மகன்
 27. கை கொடுத்த தெய்வம்
 28. சங்கமம்
 29. சத்ய சுந்தரம்
 30. சபதம்
 31. சர்வர் சுந்தரம்
 32. சரஸ்வதி சபதம்
 33. செல்வம்
 34. சொந்தம்
 35. சொர்க்கம்
 36. தசாவதாரம்
 37. தர்மராஜா
 38. தராசு
 39. திருமால் பெருமை
 40. தீர்க்கசுமங்கலி
 41. தொழிலாளி
 42. நத்தையில் முத்து
 43. நல்ல நேரம்
 44. நாணல்
 45. நான் ஏன் பிறந்தேன்
 46. நீலமலர்கள்
 47. பஞ்சவர்ணக்கிளி
 48. பணம் படைத்தவன்
 49. பதில் சொல்வாள் பத்ரகாளி
 50. பொன்னான வாழ்வு
 51. மிட்டாய் மம்மி
 52. யாருக்காக அழுதான்
 53. ராமன் எத்தனை ராமனடி
 54. ராமு
 55. விவசாயி
 56. ஊட்டி வரை உறவு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._விஜயா&oldid=3717191" இருந்து மீள்விக்கப்பட்டது