தவப்புதல்வன்
| தவப் புதல்வன் | |
|---|---|
| இயக்கம் | முக்தா சீனிவாசன் |
| தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
| கதை | தூயவன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | ஆகத்து 26, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4759 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தவப்புதல்வன் (Thavapudhalavan) என்பது 1972 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[1][2][3] முக்தா சீனிவாசன் இயக்கத்திலும், முக்தா இராமசாமி தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.[4] இத்திரைப்படம் 1972 ஆகத்து 26 அன்று வெளியாகி 100 நாட்கள் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.[5]
கதைக்களம்
[தொகு]நிர்மல் மாலைக்கண் நோயால் பாதிக்கபட்டுள்ளார். அவர் அதை தன் தாய்க்கும், முறைப் பெண் வசந்தி போன்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வருகிறார். பணத்தாசை பிடித்த நடன மங்கையான விமலா நிர்மலின் இக்கட்டான நிலையை அறிந்துகொள்கிறாள். இதைக் கொண்டு நிர்மலிடம் பணம் பறிக்க திட்டமிடுகிறாள். நிருமல் தங்கியுள்ள விடுதிக்கு வரும் விமலா நிர்மலுடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற படங்களை எடுத்துக் கொள்கிறாள். பின்னர் நிர்மலின் வீட்டிற்குள் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்துகிறாள். அந்தக் குழப்பங்கள் எப்படி தீர்ந்தன. நிர்மல் தன் முறைப்பெண் வசந்தியுடன் ஒன்று சேர்ந்தாரா என்பதை கதையின் முடிவு ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- நிர்மல் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன்
- வசந்தியாக கே. ஆர். விஜயா
- இராஜலட்சுமியாக பண்டரிபாய்
- ஈஸ்வரனாக வி. கோபாலகிருஷ்ணன்
- ஈஸ்வரியாக காந்திமதி
- ஜம்புவாக எம். ஆர். ஆர். வாசு
- ஜேம்ஸாக சோ ராமசாமி
- பங்கஜமாக மனோரமா
- மருத்துவராக செந்தாமரை
- பார்வையற்றவராக கே. கே. சௌந்தர்
- விமலா வேடத்தில் அ. சகுந்தலா
- கே. கண்ணன்
- திக்குறிசி சுகுமாரன் (விருந்தினர் தோற்றம்)
- செவிலியராக விஜயசந்திரிகா
பாடல்கள்
[தொகு]எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பெரும்பாலான பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[6] ராண்டார் கை "லவ் இஸ் பைஃன்" என்ற ஆங்கிலப் பகுதிகளை எழுதினார். "இசை கேட்டால்" என்ற பாடல் கல்யாணி இராகத்தில் அமைக்கப்பட்டது.[7] இப்பாடலுக்கு முதலில் வரிகள் எழுதப்பட்டு பின்னர் மெட்டமைக்கப்பட்டது.[8]
| பாடல். | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம். |
|---|---|---|---|
| "உலகின் முதலிசை" | டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் | கண்ணதாசன் | 03:19 |
| "இசை கேட்டால் புவி" | டி. எம். சௌந்தரராஜன் | ||
| "கிங்கினி கிங்கினி" | டி. எம். சௌந்தரராஜன் | ||
| "லவ் இஸ் பைஃன்" | எல். ஆர். ஈசுவரி, அஜித் சிங் | ராண்டர் கை & வாலி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thava Puthalavan". spicyonion.com. Retrieved 2014-09-11.
- ↑ "Thava Pudhalavan". gomolo.com. Archived from the original on 2014-09-12. Retrieved 2014-09-11.
- ↑ "Thavapudhalavan". nadigarthilagam.com. Retrieved 2014-09-11.
- ↑ "151-160". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. Retrieved 11 September 2014.
- ↑ ராம்ஜி, வி. (26 August 2022). "நடிப்பின் முதல்வன் வழங்கிய 'தவப்புதல்வன்'". Kamadenu. Archived from the original on 26 August 2022. Retrieved 14 September 2022.
- ↑ "Thavapputhalvan Tamil Film EP Vinyl Record by M S Viswanahthan". Macsendisk. Archived from the original on 14 September 2022. Retrieved 14 September 2022.
- ↑ "ஏழிசை எம்எஸ்வி | பயோகிராபி". தினமலர். Archived from the original on 26 June 2020. Retrieved 7 July 2024.
- ↑ Mega Tv (2023-11-23). "கவிஞர் கண்ணதாசனுக்கும், எனக்கும் இப்படி தான் பாட்டு வரும்..! - Endrum MSV - #megatv". Retrieved 2025-04-20.
- 1972 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்