ஆர். முத்துராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முத்துராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ர.முத்துராமன்
பிறப்பு 1929
ஓரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கிராமம்
இறப்பு 1982 (வயது 53)
மற்ற பெயர்கள் ஓந்திரியர் - உயர்ந்தரசு
பணி திரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1958 - 1982
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா
பிள்ளைகள் கார்த்திக்

முத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது மகன் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கிராமத்தில் பிறந்தவர். ஓந்திரியர் ( ஓந்தரையர் - உயர்ந்தரசு ) இவரது குடும்பப் பெயர். முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் இருந்த எம்.ஜி.ஆர் ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் ('பார் மகளே பார்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சிவந்த மண்' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் ('காதலிக்க நேரமில்லை') ஏவி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', 'கொடிமலர்') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.

இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

1950களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
1959 சகோதரி கே. பாலாஜி, ராஜசுலோசனா ஏ. பீம்சிங்
1959 உலகம் சிரிக்கிறது எம். ஆர். ராதா, சௌகார் ஜானகி ஆர். ராமமூர்த்தி
1959 நாலு வேலி நிலம் எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், மைனாவதி முக்தா சீனிவாசன்
1959 மாலா ஒரு மங்கல விளக்கு எம். ஆர். ராதா, தேவிகா எஸ். முகர்ஜி

1960களில்[தொகு]

பார் மகளே பார் நெஞ்சில் ஓர் ஆலயம் பஞ்சவர்ணக்கிளி காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு படித்தால் மட்டும் போதுமா கொடி மலர் அன்னை இல்லம் சர்வர் சுந்தரம் பழநி போலீஸ்காரன் மகள் வாழ்க்கை கற்பகம் சித்தி வானம்பாடி மேஜர் சந்திரகாந்த் கலைக்கோயில் எதிர் நீச்சல் நவக்கிரகம் மகாலக்‌ஷ்மி மல்லியம் மங்களம் சுமைதாங்கி குங்குமம் மணியோசை அம்மா எங்கே? தெய்வத் திருமகள் கர்ணன் நானும் மனிதன் தான் திருவிளையாடல் மகாகவி காளிதாஸ் நாணல் பணம் தரும் பரிசு பூஜைக்கு வந்த மலர் தாயின் கருணை நம்ம வீட்டு லக்‌ஷ்மி மறக்க முடியுமா? அனுபவம் புதுமை அனுபவி ராஜா அனுபவி பாமா விஜயம் தெய்வச்செயல் முகூர்த்தநாள் நான் நெஞ்சிருக்கும் வரை ராஜாத்தி சீதா தங்கை திருவருட்செல்வர் தேவி பூவும் பொட்டும் டீச்சரம்மா தேர்த்திருவிழா உயிரா? மானமா? அவரே என் தெய்வம் கண்ணே பாப்பா காவல் தெய்வம் நிறைகுடம் சிவந்த மண் சுபதினம் துலாபாரம்

1970களில்[தொகு]

  1. அவளும் பெண்தானே

1980களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
1982 போக்கிரி ராஜா ரஜினிகாந்த், ஸ்ரீதேவி எஸ். பி. முத்துராமன் இறுதி திரைப்படம்
1980 குரு ரகு கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஐ. வி. சசி

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._முத்துராமன்&oldid=2466910" இருந்து மீள்விக்கப்பட்டது