உள்ளடக்கத்துக்குச் செல்

வானம்பாடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானம்பாடி
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகே. முருகேசன்
கண்ணதாசன் (கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்)
திரைக்கதைவலம்புரி சோமநாதன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
தேவிகா
ஆர். முத்துராமன்
ஷீலா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
வெளியீடு9 மார்ச் 1963 (1963-03-09)
நீளம்4455 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வானம்பாடி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா, ஆர். முத்துராமன் போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். கண்ணதாசன் தயாரித்த இத்திரைப்படம் சேஷ் பரிசய் என்ற வங்காள மொழி திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இப்படம் வணிகரீதியாக வெற்றியும் பெற்றது.

நடிப்பு

[தொகு]
நடிகர் கதாபாத்திரம்
எஸ். எஸ். ராஜேந்திரன் சேகர்
தேவிகா உமா/மீனா/சுமதி/கௌசல்யா தேவி
ஆர். முத்துராமன் மோகன்
ஷீலா சித்ரா
கமல்ஹாசன் ரவி
எஸ். வி. சகஸ்ரநாமம் தணிகாசலம்
டி. ஆர். இராமச்சந்திரன் நித்யானந்தம்
இரா. சு. மனோகர் கோபால்
ஜாவர் சீதாராமன் சிவகரன்
டி. ஆர். ராஜகுமாரி பார்வதி தணிகாசலம்
புஷ்பலதா கல்யாணி நித்யானந்தம்
வி. எஸ். ராகவன் சோமசுந்தரம்
ஒ.ஏ.கே. தேவர் ஜமீன்தார் மார்த்தாண்டம்
எம்.இ. மாதவன் சுந்தரமூர்த்தி

தயாரிப்பு

[தொகு]

கவிஞர் கண்ணதாசன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.[1] இந்த படம் வங்காள மொழியில் வெளி வந்த சேஷ் பரிசய் என்ற திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.[2] இப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை ஜோதிலட்சுமி இந்த படத்தில் வரும் 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடலில் நடித்ததின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[3] டி. ஆர். ராஜகுமாரி நடித்த கடைசித் திரைப்படம் இதுவாகும்.[4]

வெளியீடு

[தொகு]

வானம்பாடி மார்ச் 9,1963 அன்று வெளியானது. இப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.[5]

பாடல்கள்

[தொகு]
வானம்பாடி
வெளியீடு1963
நீளம்33:03
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கே. வி. மகாதேவன்

கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது. "கங்கைகரை" என்ற பாடல் அபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. "தூக்கண்ணா குருவி" பாடலானது சாருகேசியுடனான சுத்த தண்யாசி ராகம்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "கங்கை கரை தோட்டம்" பி. சுசீலா கண்ணதாசன் 5:46
2 "ஊமை பெண் ஒரு" 4:03
3 "தூக்கனா குருவி கூடு" 4:21
4 "ஆண் கவியை வெல்ல" டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 5:30
5 "கடவுள் மனிதனை" டி. எம். சௌந்தரராஜன் 3:20
6 "ஏட்டில் எழுதி வைத்தான்" டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி 3:24
7 "யாரடி வந்தார்" எல். ஆர். ஈஸ்வரி 3:49
8 "நில் கவனி புறப்படு" ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி 4:10

மேற்கோள்கள்

[தொகு]
  1. கண்ணதாசன் (2008). எனது சுயசரிதம். கண்ணதாசன் பதிப்பகம். p. 95. ISBN 9788184020205.
  2. வாமனன் (23 ஏப்ரல் 2018). "தமிழ் சினிமாவை இணைத்த ஹவுரா பிரிட்ஜ்!". தினமலர் இம் மூலத்தில் இருந்து 2019-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190228130605/http://www.dinamalarnellai.com/cinema/news/47841. 
  3. "11. உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்". தினமணி. 1 நவம்பர் 2019. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/nov/01/veteram-comedian-trramachandran-life-history-3264635.html. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020. 
  4. ""கனவுக்கன்னி" டி.ஆர்.ராஜகுமாரி 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தார்". மாலை மலர். 4 ஆகஸ்ட் 2009. Archived from the original on 2013-01-28. Retrieved 27 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!". தினமணி. 3 செப்டம்பர் 2016. Archived from the original on 2021-05-29. Retrieved 29 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்பாடி_(திரைப்படம்)&oldid=3825812" இலிருந்து மீள்விக்கப்பட்டது