ஷீலா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷீலா
Sheela.png
பிறப்பு மார்ச்சு 22, 1942 ( 1942-03-22) (அகவை 78)
இந்தியா இந்தியா
நடிப்புக் காலம் 1962 - தற்போதுவரை
துணைவர் ரவிசந்திரன்
குறிப்பிடத்தக்க படங்கள் செம்மீன்

ஷீலா, திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் கிலாரா ஆப்ரகாம். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரும் இவரும் இணைந்து அதிகப் படங்களில் நடித்துள்ளனர். 1980-ல் ஸ்போடனம் என்ற திரைப்படத்துடன் தற்காலிகமாக நடிப்பைக் கைவிட்டார். பின்னர் 2003-ல் சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரெ என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்தார்.

திரைப்பட இயக்குனரான பாபு சேவியர், இவரது கணவர். இவர் மகன் விஷ்ணுவும் திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தவர். திருச்சூர் கணிமங்கலம் சுதேசி ஆன்டணி, கிரேசி ஆகியோர் இவரது பெற்றோர்.[1] இவர் ஷீலா என்ற பெயரில் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

திரைப்படத்துறை[தொகு]

எம்.ஜி.ஆர். நாயகனாய் நடித்த பாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நிறைந்தார். இவர் செம்மீன், அஸ்வமேதம், கள்ளிச்செல்லம்மா, அடிமைகள், ஒருபெண்ணின்றெ கத, நிழலாட்டம், அனுபவங்ஙள் பாளிச்சகள், யட்சகானம், ஈற்ற, ஸரபஞ்சரம், கலிக, அக்னிபுத்ரி, பார்யமார் ஸூக்‌ஷிக்குக, மிண்டாப்பெண்ணு, வாழ்‌வேமாயம், பஞ்சவன் காட், காபாலிக உட்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரேம் நசீர், சத்யன், மது, ஜெயன், சுகுமாரன் (நடிகர்), கமலகாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. நடிகை: ஷீலா; மை லைப் அன்ரோல்டு- வனித (15-31)டிசம்பர் 2010, வெளியீடு: மலையாள மனோரமா

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_(நடிகை)&oldid=2717419" இருந்து மீள்விக்கப்பட்டது