தேவிகா
தேவிகா | |
---|---|
பிறப்பு | பிரமீளா தேவி 25 ஏப்ரல் 1943 சென்னை |
இறப்பு | 2 மே 2002 சென்னை | (அகவை 59)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1954–1986 |
வாழ்க்கைத் துணை | தேவதாஸ் (தி. 1972-1990) (மணமுறிவு) |
பிள்ளைகள் | கனகா (பி. 1973) |
தேவிகா (25 ஏப்ரல் 1943 – 2 மே 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட அனுபவம்
[தொகு]தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். தேவிகா நடித்த கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண் ஆகும்.
திரைப்படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]- சத்யம் (1976)
- இப்படியும் ஒரு பெண் (1975)
- பிள்ளைச் செல்வம் (1974)
- பாரத விலாஸ் (1973)
- வெகுளிப் பெண் (1971)
- அன்னை வேளாங்கண்ணி (1971)
- எங்கிருந்தோ வந்தாள் (1970)
- தேவி (1968)
- தெய்வீக உறவு (1968)
- பெண்ணே நீ வாழ்க (1967)
- சரஸ்வதி சபதம் (1966)
- மறக்க முடியுமா (1966)
- திருவிளையாடல் (1965)
- அன்புக்கரங்கள் (1965)
- சாந்தி (1965)
- பூஜைக்கு வந்த மலர் (1965)
- நீலவானம் (1965)
- பழனி (1965)
- வாழ்க்கைப் படகு (1965)
- முரடன் முத்து (1964)
- கர்ணன் (1964)
- ஆண்டவன் கட்டளை (1964)
- வழி பிறந்தது (1964)
- கலைக்கோவில் (1964)
- நெஞ்சம் மறப்பதில்லை (1963)
- இதயத்தில் நீ (1963)
- ஆனந்த ஜோதி (1963)
- குலமகள் ராதை (1963)
- ஆயிரம் காலத்துப் பயிர் (1963)
- வானம்பாடி (1963)
- அன்னை இல்லம் (1963)
- நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
- பந்த பாசம் (1962)
- சுமைதாங்கி (1962)
- பலே பாண்டியா (1962)
- ஆடிப்பெருக்கு (1962)
- குமார ராஜா (1961)
- பங்காளிகள் (1961)
- கானல் நீர் (1961)
- பாவ மன்னிப்பு (1961)
- நாகநந்தினி (1961)
- பாவை விளக்கு (1960)
- இருமனம் கலந்தால் திருமணம் (1960)
- சிவகாமி (1960)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- இவன் அவனேதான் (1960)
- பாஞ்சாலி (1959)
- மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
- பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் (1959)
- சகோதரி (1959)
- நாலு வேலி நிலம் (1959)
- முதலாளி (1958)
- அன்பு எங்கே (1958)
- மணமகன் தேவை (1957)
தெலுங்கு
[தொகு]- நாட்டியதாரா
மேற்கோள்கள்
[தொகு]- "Blend of grace and charm". தி இந்து. 10 மே 2002. Archived from the original on 21 ஜூன் 2002. பார்க்கப்பட்ட நாள் 18 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Devika Biography". India Movies Database. பார்க்கப்பட்ட நாள் 18 October 2016.