உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைக் கோவில்
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஎம்.எஸ்.விஸ்வநாதன்
கங்கா
பாக்யலட்சுமி புரொடக்ஷன்ஸ்
கதைஸ்ரீதர்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
ராஜஸ்ரீ
ஒளிப்பதிவுபாலு
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
வெளியீடுசெப்டம்பர் 25, 1964
ஓட்டம்133 நிமிடங்கள்[1]
நீளம்4715 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலைக் கோவில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் இசைத் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கங்கா ஆகியோர் தயாரித்தனர். இது ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். பொருளாதார ரீதியாக இது ஒரு தோல்விப்படம் ஆகும்.[2] இது வீணை இசைக்கலைஞனின் கதையை மையமாக கொண்டனது.

இப்படத்தை பாக்கியலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் எம்.எஸ்.விஸ்வநாதன் (விசு என்ற பெயரில்), கங்கா ஆகியோர் தயாரித்தனர். படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர். கங்கா கலை இயக்குநராக பணியாற்றினார். ஸ்ரீதருடன் தொடர்ந்து பணியாற்றிய சித்ராலயா கோபு படத்தின் உதவி வசன எழுத்தாளராக பணியாற்றினார்.

கலைக் கோவில் 25 செப்டம்பர் 1964 அன்று வெளியானது. ஸ்ரீதரின் இயக்கம், எழுத்து, இசை, நடிகர்களின் நடிப்பு போன்றவை விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வணிகரீதியாக தோல்விப் படம் என்றாலும் பி. சுசீலா மற்றும் எம். பாலமுரளிகிருஷ்ணா ஆகியோர் பாடிய "தங்கரதம் வந்தது வீதியிலே" பாடல் பிரபலமடைந்தது.

கதைச்சுருக்கம்

[தொகு]

ஒரு ஏழை மனிதன் வீணை வித்வானாக ஆவதன் மூலம் ஏழ்மையில் இருந்து செல்வந்தனாக உயர்கிறான். ஆனால் அதை ஆடம்பரத்தாலிம், நாட்டியக்காரியிடமும், மதுவினாலும் இழக்கிறான்.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு

[தொகு]

காதலிக்க நேரமில்லை (1964) வெற்றிக்குப் பிறகு, அதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான சி. வி. ஸ்ரீதர், ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையான கதையில் தனது அடுத்த படத்தை இயக்கத்தை உருவாக்க முடிவு செய்தார். அவருடன் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய திரைப்பட எழுத்தாளர் சித்ராலயா கோபுவுடன், மெரீனா கடற்கரையில் சந்தித்து, அடுத்த படம் பற்றி விவாதிக்கையில், ஸ்ரீதர் அவர் ஏற்கனவே எழுதி முடித்த கதையை அவரிடம் சொன்னார், அது கலைக் கோவில் படமாக மாறியது. படத்தின் உதவி வசன எழுத்தாளராக கோபு நியமிக்கப்பட்டார். படத்தின் கதையைக் கேட்ட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன், கங்காவுடன் இணைந்து பாக்யலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் படத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்தார்.[3] கங்கா கலை இயக்குனராகவும் பணியாற்றினார், அதே சமயம் தயாரிப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பெயரானது சுவரொட்டிகள் தயாரிப்பாளர் என்ற இடத்தில் "விசு" என்று குறிப்பிடப்பட்டது. ஒளிப்பதிவை பாலு மேற்கொள்ள, படத்தொகுப்பை என். எம். சங்கர் மேற்கொண்டார்.[4][5] சிட்டி பாபு முத்துராமனுக்காக வீணை வாசித்தார்.[3][6] இப்படத்தில் எஸ். வி. சுப்பையா நடித்த பாத்திரத்துக்கு எஸ். வி. ரங்கா ராவை ஸ்ரீதர் தேர்வு செய்து ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார். படப்பிடிப்பின் முதல் நாளில் அவர் படப்பிடிப்புக்கு வராததால், அவருக்குப் பதிலாக எஸ். வி. சுப்பையாவை அப்பாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால் முதலில் அந்த வேடத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார், ஏனெனில் அவர் ஒட்டு தாடி, மீசையுடன் நடிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவர். ஆனால் பிறகு அந்த பாத்திரத்தின் முக்கியத்துவம், பேசவேண்டிய உரையால் போன்றவற்றை ஸ்ரீதர் விளக்கிய பிறகு நடிக்க ஓப்புக்கொண்டார்.[6][7]

இசை

[தொகு]

படத்திற்கான இசையை இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி (எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் டி. கே. ராமமூர்த்தி ஆகியோர்) அமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[8] "தேவியர் இருவர்" பாடல் ஸ்ரீ எனப்படும் கர்நாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[9][10] அதே சமயம் "தங்கரதம் வந்தது" பாடல் ஆபோகி இராகத்தில் அமைக்கப்பட்டது.[11][12] தங்கரதம் வந்தது பாடலுக்கு சியாம் வயலின் வாசித்தார்,[13] இது பிரபலமடைந்தது.[14] அவர் மேற்கத்திய பாடல்களுக்கு நன்கு வாசிப்பவராக இருந்ததால், பாரம்பரிய-கருப்பொருள் பாடலை வாசிப்பதில் அவர் சிரமப்பட்டார்.[15]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நான் உன்னைச் சேர்ந்த செல்வம்"  பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் 3:41
2. "தங்கரதம் வந்தது வீதியிலே"  பி. சுசீலா, எம். பாலமுரளிகிருஷ்ணா 3:31
3. "முள்ளில் ரோஜா"  எல். ஆர். ஈசுவரி, பி. பி. ஸ்ரீனிவாஸ் 5:47
4. "வரவேண்டும் ஒரு பொழுது"  எல். ஆர். ஈஸ்வரி 3:45
5. "தேவியர் இருவர் முருகனுக்கு"  பி. சுசீலா 3:47
மொத்த நீளம்:
20:31

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kalai Kovil". Complete Index to World Film. Archived from the original on 6 December 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  2. டி.ஏ.நரசிம்மன் (29 சூன் 2018). "ஸ்ரீதருக்கு அடி சறுக்கியதா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2018.
  3. 3.0 3.1 நரசிம்மன், டி.ஏ. (29 June 2018). "சி(ரி)த்ராலயா 24: ஸ்ரீதருக்கு அடி சறுக்கியதா?" (in ta). இந்து தமிழ் (நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 11 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210211035755/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/130957-24.html. 
  4. "Kalai Kovil". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 19 September 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640919&printsec=frontpage&hl=en. 
  5. "Kalai Kovil". இந்தியன் எக்சுபிரசு: pp. 13. 15 August 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640815&printsec=frontpage&hl=en. 
  6. 6.0 6.1 "கலை கோவில்: ஒரு கிளாசிக்" [Kalai Kovil: A Classic]. Kalki. 12 April 1992. pp. 53–54. பார்க்கப்பட்ட நாள் 14 December 2022.
  7. "ரங்காராவ் அளித்த ஏமாற்றம்". Kalki. 5 April 1992. pp. 60–61. பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  8. Viswanathan–Ramamoorthy (1964). "Kalaikkoil (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 5 December 2018. பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.
  9. Sundararaman 2007, ப. 127.
  10. Charulatha Mani (19 July 2013). "Auspicious Sri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206135808/http://www.thehindu.com/features/friday-review/music/auspicious-sri/article4931610.ece. 
  11. Charulatha Mani (2 March 2012). "A Raga's Journey – Arresting Abhogi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181006235026/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-arresting-abhogi/article2954010.ece. 
  12. Sundararaman 2007, ப. 160.
  13. Pradeep, K. (17 March 2017). "The Shyam effect". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181205170019/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-shyam-effect/article17494751.ece. 
  14. "எளிமைக்கு உதாரணமான இசைமேதை" (in ta). தினகரன் (இலங்கை). 24 November 2016 இம் மூலத்தில் இருந்து 5 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181205162904/http://www.thinakaran.lk/node/14822. 
  15. Unni, Prakasam K. (3 November 2003). "Play it again, Shyam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181206173201/https://www.thehindu.com/thehindu/mp/2003/11/03/stories/2003110300710200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைக்கோவில்&oldid=3797609" இலிருந்து மீள்விக்கப்பட்டது