இவன் அவனேதான்
இவன் அவனேதான் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | பி. சிறீதர் |
தயாரிப்பு | டி. ஜி. ராஜ் |
திரைக்கதை | கலைப்பித்தன் |
இசை | எம். ரங்கா ராவ் |
நடிப்பு | உதயகுமார் அம்பிகா |
ஒளிப்பதிவு | டி. வி. பாலு |
படத்தொகுப்பு | ஜி. வெங்கடராமன் |
கலையகம் | டி. ஜி. ஆர். பிக்சர்ஸ் |
வெளியீடு | 25 மார்ச்சு 1960 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இவன் அவனேதான் (Ivan Avanethan) பி. ஸ்ரீதர் இயக்கத்தில், 1960 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜி. ராஜ் தயாரிப்பில், எம். ரங்கா ராவ் இசை அமைப்பில், 25 மார்ச் 1960 அன்று இப்படம் வெளியானது. உதயகுமார், எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், கே. சக்ரபாணி, அம்பிகா, தேவிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
[தொகு]உதயகுமார், எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், கே. சக்ரபாணி, அம்பிகா, தேவிகா, ஏ. கே. வீராசாமி, எஸ். என். லட்சுமி, ராஜாமணி, உமா.
கதைச்சுருக்கம்
[தொகு]படிக்காத கிராம இளைஞன் முத்து. தன் அத்தை மகள் மாலினியை விரும்பி வருகிறான். தந்தை இல்லாத மாலினியை, அவளது தாய் வளர்த்து வருகிறாள். மாலினியின் தாய் படித்து பணம்படைத்தவர் என்பதால், முத்துவை வெறுக்கிறார். லக்ஷ்மியின் கணவன் சுந்தர். சுந்தருக்கு பிரேமா என்ற காதலியும் உண்டு. மாலினியின் அழகிலும் செல்வத்திலும் மயங்கிய சுந்தர், மாலினியை ஒரு சிறந்த மேடை நாடக நடிகையாக ஆக்குவதாக பொய் சொல்கிறான். மாலினியின் செல்வத்தை அடைய நினைக்கும் சுந்தருக்கு முத்து தடையாக அமைகிறான். குணபூஷணம் என்ற ஒரு மனநல மருத்துவர் இருந்தார். முத்து, மாலினி, சுந்தர், லட்சுமி, பிரேமா ஆகியோர் அவரிடம் சிகிட்சைக்காக சென்றனர். அவர்களை குணப்படுத்தி, எவ்வாறு அவர்களது பிரச்சனைகளை மருத்துவர் சரி செய்தார் என்பதே மீதிக் கதையாகும்.[2]
ஒலிப்பதிவு
[தொகு]இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் எம். ரங்கா ராவ் ஆவார். தஞ்சை என். ராமையா தாஸ், எம். எஸ். சுப்பிரமணியம், கலைப்பித்தன், வில்லிபுதன், கோவை சபாபதி ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. லீலா, திருச்சி லோகநாதன், எஸ்.சி. கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன், எம். எஸ். ராஜேஸ்வரி, எஸ். ஜானகி ஆகியோர் பாட்டுக்களை பாடினர்.[3]
பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"தேவி ஜெகன் மாதா" | பி. பி. சீனிவாஸ், பி. லீலா | தஞ்சை என். ராமையா தாஸ் | |
"அண்ணே அடி பெண்ணே" | திருச்சி லோகநாதன் | எம். எஸ். சுப்பிரமணியம் | |
"எது நிஜம் எது பொய்" | எஸ். சி. கிருஷ்ணன், எம். எஸ். ராஜேஸ்வரி | ||
"பெண் என்றால் பேயும் மனம்" | சீர்காழி கோவிந்தராஜன் | ||
"ஹேப்பி ஜாலி குட் டே" | எஸ். ஜானகி | ||
"செம்பட்டு வேட்டி கட்டி" | எஸ். சி. கிருஷ்ணன் | கலைப்பித்தன் | |
"வாழ்க்கையின் பாடம்" | திருச்சி லோகநாதன், எஸ். ஜானகி | வில்லிபுதன் | 03:25 |
"இன்ப எல்லை காணும் நேரம்" | பி. பி. சீனிவாஸ், எஸ். ஜானகி | 03:19 | |
"மாமுனியே மாதவமே" | எஸ். ஜானகி | கோவை சபாபதி |
வரவேற்பு
[தொகு]வணிக ரீதியாக வெற்றிபெற்ற இவன் அவன்தான் திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக எங்கும் அறியப்படவில்லை.[4]
வெளி-இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "http://www.lakshmansruthi.com". Archived from the original on 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
{{cite web}}
: External link in
(help)CS1 maint: unfit URL (link)|title=
- ↑ Ivan Avanethan song book. Nathans, Madras-2.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 191.
- ↑ "http://www.thehindu.com". Archived from the original on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
{{cite web}}
: External link in
(help)CS1 maint: unfit URL (link)|title=