கானல் நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெப்பமான காலநிலைகளில் நேரான தார்ப் பாதைகள் முதலானவை நீர்த்தடாகம் போன்று தோற்றமளிக்கும் தோற்றப்பாடு கானல் நீர் எனப்படும். இது வளியில் ஒளியின் ஒளிமுறிவு மற்றும் முழு அகத் தெறிப்பு நிகழ்வதால் ஏற்படுகின்றது. வெப்பங் காரணமாக வளிப்படை சூடடைகின்றது. இதில் நிலமட்டத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும்போது வளிப்படை சூடையும் அளவு படிப்படியாகக் குறைவடைந்து செல்வதால் வெவ்வேறு விரிவு நிலையில் வளி காணப்படுகின்றது. இதன் காரணமாக வெவ்வேறு ஊடகம் போல் தொழிற்படுகின்றது. இதில் முழு அகத்தெறிப்பு நிகழுவதால் முறிவடைந்த தோற்றப்பாடு நிகழுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானல்_நீர்&oldid=1475011" இருந்து மீள்விக்கப்பட்டது