உள்ளடக்கத்துக்குச் செல்

குலமகள் ராதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலமகள் ராதை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஸ்பைடர் பிலிம்ஸ்
கதைகதை அகிலன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பி. சரோஜாதேவி
தேவிகா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குலமகள் ராதை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எழுத்தாளர் அகிலன், கலைமகள் இதழில் வாழ்வு எங்கே? என்ற பெயரில் தொடர் கதையாக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1] இது 1963 ஜூன் 7 அன்று வெளியானது.

கதை

ராதையும் சந்திரனும் காதலிக்கின்றனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். ஓடிப்போக முயற்சிக்கும்போது, ​​ராதையின் மைத்துனி வனஜா ராதையைத் தடுத்து, ஓடிப்போக வேண்டாம் என்று அவளை சமாதானப்படுத்துகிறாள். இதனால் சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி காதலியையும், வீட்டையும் விட்டு வெளியேறி சர்கஸ் ஒன்றில் சேர்கிறான். அங்கு சந்திரன் சர்கஸ் கலைஞரான லீலாவைக் காதலிக்கிறான். ஒரு நிகச்சியின்போது, பார்வையாளராக வரும் ராதையைக் கண்டதும் தன்னை மறந்து சர்கசிலிருந்து சந்திரன் கீழே விழுகிறான். பலத்த காயமுற்ற சந்திரனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். சந்திரனக்கு என்னவாயிற்று, பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.

நடிப்பு

துணை நடிகர்களாக
துணை நடிகைகள்

தயாரிப்பு

குலமகள் ராதை படத்தை ஏ. பி. நாகராஜன் திரைக்கதை, உரையாடல் எழுதி இயக்கினார். ஸ்பைடர் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் தயாரித்தது.[2][3] இது அகிலனின் வாழ்க்கை எங்கே என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[4][5] ஒளிப்பதிவை டபிள்யூ. ஆர். சுப்பா ராவ் மேற்கொண்டார், படத்தொகுப்பு பணிகளை கே. துரைராஜ் கையாண்டார்.[3]

இசை

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[6][7]

பாடல் பாடகர் வரிகள் நீளம்
"ஆருயிரே மன்னவரே" பி. சுசீலா கண்ணதாசன் 03.23
"இரவுக்கு ஆயிரம் கண்கள்" 03.11
"கள்ளமலர் சிரிப்பிலே" அ. மருதகாசி 03.14
"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" கண்ணதாசன் 03.20
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:28
"ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 02.52
"உலகம் இதிலே அடங்குது. உண்மையும் பொய்யும் விளங்குது" கண்ணதாசன் 03.30
"உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை" 03.32

வெளியீடும் வரவேற்பும்

குலமகள் ராதை 1963 சூன் 7 அன்று வெளியானது.[3] ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம் இதழில், டி. எம். ராமச்சந்திரன் இந்த படத்தை "சராசரியை விட கூடுதலானது" அழைத்தார், நாகராஜனின் இயக்கம், நடிகர்களின் நடிப்பு, இசை போன்றவற்றைப் பாராட்டினார். அதே சமயம் படத்தில் வணிகத்துக்காக நாகராஜன் சமரசங்களை மேற்கொண்டதாக விமர்சித்தார்.[8] கல்கியின் காந்தன் படத்தை ஆரம்ப - ஐதர் காலத்து - - மறந்து போன ஆர்மச்சூர் நடகங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று விமர்ச்சித்தார்.[9]

மேற்கோள்கள்

  1. ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம், அகிலன் கண்ணன், இந்து தமிழ், 2020 சனவரி 31
  2. Jeshi, K. (20 March 2014). "Celluloid stories". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201016210047/https://www.thehindu.com/features/cinema/celluloid-stories/article5810184.ece. 
  3. 3.0 3.1 3.2 "குலமகள் ராதை" (in ta). சுதேசமித்திரன். 7 June 1963 இம் மூலத்தில் இருந்து 30 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190430152148/http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6057-1.jpg. 
  4. "திரை உலகில் அகிலன்" (in ta). தினத்தந்தி. 9 April 2016 இம் மூலத்தில் இருந்து 30 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170930061722/http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/04/09110713/The-screen-in-the-worldAkilan.vpf. 
  5. Swaminathan, G. (2 July 2020). "Print to celluloid: From 'Kalvanin Kadhali' and 'Mullum Malaram' to 'Ponniyin Selvan'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200703191656/https://www.thehindu.com/entertainment/movies/print-to-celluloid-from-kalvanin-kadhali-and-mullum-malaram-to-ponniyin-selvan/article31971471.ece. 
  6. "Kulamagal Radhai (1963)". Raaga.com. Archived from the original on 23 December 2014. Retrieved 10 December 2014.
  7. "Kulamagal Raadhai , Deivamagan Tamil Film LP Vinyl record". Mossymart. Archived from the original on 18 April 2023. Retrieved 18 April 2023.
  8. Ramachandran, T. M. (6 July 1963). "Kulamagal Radhai". ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம். p. 43. Archived from the original on 2 February 2023. Retrieved 2 February 2023 – via இணைய ஆவணகம்.
  9. காந்தன் (30 June 1963). "குலமகள் ராதை". Kalki. pp. 44–45. Archived from the original on 8 September 2023. Retrieved 28 March 2024 – via இணைய ஆவணகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலமகள்_ராதை&oldid=4351603" இலிருந்து மீள்விக்கப்பட்டது