சரோஜாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. சரோஜாதேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பி. சரோஜாதேவி
Saroja Devi.jpg
இயற் பெயர் இராதாதேவி கவுடா
பிறப்பு சனவரி 7, 1938 (1938-01-07) (அகவை 83)
கர்நாடகா, இந்தியா
வேறு பெயர் 1)அபிநய சரஸ்வதி,
கன்னடத்து பைங்கிளி (தமிழ்)
2)அபிநய பாரதி (ஹிந்தி)
3)அபிநய காஞ்னமாலா (கன்னடம்)
4)சல்லாப சுந்தாி (தெலுங்கு)
தொழில் திரைப்படநடிகை
நடிப்புக் காலம் 1955-நடப்பு
துணைவர் ஸ்ரீ ஹர்ஷா

பி. சரோஜாதேவி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் ஒக்காலிகா்கவுண்டா் சமூகத்தில் பிறந்தவர். [சான்று தேவை]

வாழ்க்கை குறிப்பு[தொகு]

 • தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி அவர்கள். மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.
 • ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
 • பெங்களூரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி ஜாவர் பைரப்பா–ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாக ராதாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தாா். இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா்.
 • இவா் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று பெயரை மாற்றி கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).
 • இதன்பின் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' 1959 படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

திரைப்பட அனுபவங்கள்[தொகு]

 • இவர் எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளாா்.
 • பின்பு ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா். என்றாலும் தமிழில் கதாசிாியா் மா. லட்சுமணன் முதல் மண்ணாங்கட்டி சுப்பிரமணியம் வரை ஜோடியாக இணைந்து நடித்த ஒரே நடிகை சரோஜாதேவி ஆவாா்.
 • அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டனர்.
 • 1965 பிறகு தமிழ் திரையுலகில் கே. ஆர். விஜயா, ஜெயலலிதா வருகைக்கு பின் நாட்களில் இந்த முப்பெரும் கதாநாயகிகளுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது. அதிலும் குறிப்பாக நடிகை சரோஜா தேவிக்கு தமிழ் திரைப்படங்களில் கே. ஆர். விஜயாவின் அறிமுகத்திற்கு பின் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
 • இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தெடுத்து வளா்த்து வருகிறாா்.
 • இவா் திருமணத்திற்கு பிறகு அவா் கணவாின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தாா். இந்தி, தெலுங்கு, கன்னடம், படங்களில் நடித்தாா்.
 • அந்த சமயத்தில் பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது 100வது திரைப்படம் தமிழில் வெளிவர வேண்டும் என்று ஆசைபட்டார் அந்த திரைப்படம் பெண் என்றால் பெண் சரியான சென்டிமென்ட் கதை இருந்தாலும் படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடத்தில் நடித்ததால் படம் வெற்றி பெறவில்லை.
 • இருந்தபோதிலும் சிவாஜி கணேசன் உடன் 7 படங்களில் இணைந்து நடித்தாா். அவை என் தம்பி, அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520, அருணோதயம், தேனும் பாலும், பாரம்பரியம், ஒன்ஸ்மோர் ஆகிய படங்கள் ஆகும்.
 • அதில் திருமணத்திற்கு பிறகு சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த முதல் படமான என் தம்பி படத்தில் ஒரு பாடல் காட்சியில் சிவாஜி சாட்டையால் சரோஜாதேவியை அடித்து ஆட வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் சரோஜாதேவி பிரசவ நிலையில் இருந்ததால் உடல் பருமனாகவும் (குண்டாக) தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால்.
 • இதை சாிசெய்யும் விதமாக அந்த படத்தில் நடித்த கதாசிாியா் ஜாவர் சீதாராமன் அவா்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட (Short Belt) எனப்படும். உடலையும், வயிற்றையும் குறைத்து ஒல்லியாக காட்டும் ஷாட்பெல்ட் அணிந்து சரோஜாதேவியை நடிக்க வைத்தாா். அதன் பின்பு நடித்த அனைத்து படங்களிலும் சரோஜாதேவி வயிற்றில் ஷாட்பெல்ட் அணிந்து அழகான உடல்தேகத்துடன் நடித்தாா்.
 • இந்திய திரையுலகில் முதன் முதலாக ஷாட்பெல்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என்று பெருமைக்குாியவா் நடிகை சரோஜாதேவி அவா்களே ஆவாா்.
 • ஆனால் ஷாட்பெல்ட் அணிந்து நடித்த பலன் ஆனது இப்போது சரோஜாதேவி அவா்கள் முதுமையில் மிகவும் இடுப்புவலியினால் சிரமபட்டுவந்தாா் பின்பு அவரது டாக்டா் சுவாதினா அவா்கள் (Hand-Hippunch Massage) ஹான்ட்-ஹிப்பஞ்ச் மசாஜ் மூலமாக சரோஜாதேவியின் இடுப்புவலியை குணம் செய்துவருகிறாா்.

தனிநபர் தகவல்[தொகு]

 • நிறைவேறிய ஆசை தமிழ் திரைப்படங்களில் நடித்தது தனது 100வது படம் தமிழில் அமைந்தது.
 • மேலும் எம். ஜி. ஆர் இடம் கற்று கொண்ட உதவும் மனப்பான்மை.
 • சிவாஜி கணேசன் இடம் நடிப்பை பற்றி குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பின் போது நேரம் தவறாமையும்.
 • நிறைவேறாத ஆசைகள் கற்பகம் திரைப்படத்தில் முதலில் கதாநாயகி ஆக நடிக்க வைக்க இருந்த போதிலும் நான் பல மொழி திரைப்படங்களில் பிசியாக இருந்ததால். அந்த வாய்ப்பு எனது தோழி கே. ஆர். விஜயாக்கு சென்றது
 • அதே போல் செல்வம் திரைபடத்தில் கே. ஆர். விஜயா அவர்கள் நடித்த கதாபாத்திரம் நான் நடிக்க ஏங்கிய கதாபாத்திரம்.
 • எனக்கு பிடித்தது :- எனது தாயாா் தமிழ் பேசும்போது எனக்கு வரும் சிரிப்பு
 • அதை போல் தலையில் மல்லிகைபூ வைத்து அதன் நடுவே எனக்கு பிடித்த ரோஜாபூவை வைப்பது
 • எனக்கு பிடிக்காதது :-

படப்பிடிப்பின் போது எனக்கு எதிரியாக அமைந்தது பயங்கரமான இடுப்பு வலியும், கடுமையான வயிற்று வலியும்தான் என்று கூறுகிறார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

 1. நாடோடி மன்னன் (1958)
 2. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
 3. பார்த்திபன் கனவு (1960)
 4. இருவர் உள்ளம் (1963)
 5. என் தம்பி (1968)
 6. அஞ்சல் பெட்டி 520 (1969)
 7. அருணோதயம் (1971)
 8. அரச கட்டளை (1966)
 9. அன்பளிப்பு (1969)
 10. அன்பே வா (1966)
 11. ஆசை முகம் (1965)
 12. ஆதவன் (2009)
 13. ஆலயமணி (1962)
 14. இரும்புத்திரை (1960)
 15. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
 16. என் கடமை (1964)
 17. ஒன்ஸ்மோர் (1997)
 18. ஓடும் நதி (1969)
 19. கண்மலர் (1970)
 20. கல்யாண பரிசு (1959)
 21. கல்யாணியின் கணவன் (1963)
 22. கலங்கரை விளக்கம் (1965)
 23. குடும்பத்தலைவன் (1962)
 24. குலமகள் ராதை (1963)
 25. குலவிளக்கு (1969)
 26. கைராசி (1960)
 27. சபாஷ் மீனா (1958)
 28. சிநேகிதி (1970)
 29. செங்கோட்டை சிங்கம் (1958)
 30. தங்க மலர் (1969)
 31. தர்மம் தலைகாக்கும் (1963)
 32. தாய் சொல்லை தட்டாதே (1961)
 33. தாயைக்காத்த தனயன் (1961)
 34. தாலி பாக்கியம் (1966)
 35. திருடாதே (1960)
 36. தெய்வத்தாய் (1964)
 37. நாடோடி (1966)
 38. நான் ஆணையிட்டால் (1966)
 39. நீதிக்குப்பின் பாசம் (1963)
 40. படகோட்டி (1964)
 41. பணக்கார குடும்பம் (1964)
 42. பணத்தோட்டம் (1963)
 43. பணமா பாசமா (1968)
 44. பறக்கும் பாவை (1966)
 45. பனித்திரை (1961)
 46. பாகப்பிரிவினை (1959)
 47. பாசம் (1962)
 48. பார்த்தால் பசி தீரும் (1962)
 49. பாலும் பழமும் (1961)
 50. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1958)
 51. தங்கமலை ரகசியம் (1957)
 52. புதிய பறவை (1964)
 53. பெரிய இடத்துப் பெண் (1963)
 54. பெற்றால்தான் பிள்ளையா (1966)
 55. மாடப்புறா (1962)
 56. யானைப்பாகன் (1958)
 57. வளர் பிறை (1962)
 58. வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
 59. வாழவைத்த தெய்வம் (1960)
 60. விடிவெள்ளி (1960)
 61. தேனும் பாலும் (1971)
 62. பாரம்பரியம் (1993)
 63. செல்வம் (1966)

தேசிய விருதுகள்[தொகு]

 • 2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
 • 1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
 • 1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது

பிற விருதுகள்

 • 2009 ஆந்திர அரசின் என் டி ஆர் தேசியவிருது
 • 2009 கர்நாடக அரசின் ராஐகுமார் தேசியவிருது
 • 2009 நாட்டிய கலாதர் - தமிழ் சினிமா by Bharat Kalachar Chennai
 • 2007 என் டி ஆர் விருது for remarkable achievement by Karnataka Telugu Academy
 • 2007 ரோட்டரி சிவாஜி விருது by the Charitable Trust and Rotary Club of Chennai
 • 2006 பெங்களூர் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
 • 2003 தினகரன் சாதனையாளர் விருது
 • 2001 ஆந்திர அரசின் என்டிஆர் தேசியவிருது 2001
 • 1997 எம்.ஜி.ஆர். விருது - தமிழக அரசு
 • 1997 சாதனையாளர் விருது - சினிமா எக்ஸ்பிரஸ் சென்னை
 • 1997 அனைத்து சுற்றுக்குமான சாதகமானவர் பிலிம்பேர் விருது
 • 1989 கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது
 • 1980 கர்நாடக அரசின் அபினண்டன -காஞ்சனா மாலா விருது
 • 1965 சிறப்பு பெயராக "அபிநய சரஸ்வதி " - கர்நாடக அரசு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜாதேவி&oldid=3154911" இருந்து மீள்விக்கப்பட்டது