ஒன்ஸ்மோர்
ஒன்ஸ்மோர் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
நடிப்பு | சிவாஜி கணேசன் விஜய் சிம்ரன் சரோஜாதேவி மணிவண்ணன் |
வெளியீடு | 1997 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஒன்ஸ்மோர் (Once More) (மொ.பெ. மீண்டும் ஒருமுறை) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வகை[தொகு]
நடிகர்கள்[தொகு]
- செல்வமாக சிவாஜி கணேசன்
- சாந்தாவாக சரோஜாதேவி
- விஜயாக விஜய்
- கவிதாவாக சிம்ரன்
- விஜயின் தாய்மாமனாக மணிவண்ணன்
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தன் அக்காவின் சாவுக்கு விஜய் தான் காரணம் என்று நினைக்கும் கவிதா (சிம்ரன்) பழிவாங்கும் நோக்கில் அவருடன் நெருங்கிப் பழகுகின்றார். உண்மையில் விஜயை ஒருதலையாக காதலித்த காரணத்தாலே அவள் இறந்தாள் என்பது கவிதாவும் அவள் அம்மாவும் அறியாதது. இடையில், சாந்தாவுக்கும் (சரோஜாதேவி) செல்வத்துக்கும் (சிவாஜி கணேசன்) இருக்கும் மனக்கசப்பையும், கருத்துவேறுபாட்டையும் தீர்க்கவும் விஜய் பாடுபடுகிறார். இறுதியில் அவரை கொல்லும் நோக்கில் வந்த கவிதா, விஜயுடன் இணைகிறார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]