தேவா (1995 திரைப்படம்)
தேவா | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி. விமல் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் சிவகுமார் சுவாதி மனோரமா மன்சூர் அலி கான் மணிவண்ணன் வினு சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | கவுதம் ராஜு |
கலையகம் | பி. வி. கம்பைன்ஸ் |
விநியோகம் | பி. வி. கம்பைன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேவா (Deva) 1995 ஆம் ஆண்டு விஜய், சுவாதி மற்றும் சிவகுமார் நடிப்பில், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், தேவாவின் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.[சான்று தேவை]
கதைச்சுருக்கம்
[தொகு]வெளியூரில் படித்துவிட்டு ஊர் திரும்பும் தேவா (விஜய்) பாரதி (சுவாதி)மீது காதல் கொள்கிறான். தேவாவின் தாய் ராசாத்தி (மனோரமா). தேவாவின் அண்ணன் ராஜதுரை ( மன்சூர் அலி கான்) தன் மோசமான நடவடிக்கைகளால் அனைவராலும் வெறுக்கப்படும் அந்த ஊரின் பணக்காரன். அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் மயில்சாமி (மணிவண்ணன்). ராஜதுரை செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்படும் ஊர் மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். சிலர் அவனுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பாரதியின் தந்தையும், ஊர்த்தலைவருமான காந்திதாசன் (சிவகுமார்) தலைமையில் அந்தப் போராட்டம் நடக்கிறது. தான் பாரதியைக் காதலிப்பதைக் காந்திதாசனிடம் கூறி சம்மதம் பெறுகிறான் தேவா. தேவாவின் தாய் அதற்குச் சம்மதித்தாலும் ராஜதுரை அந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். ராஜதுரையிடம் சண்டையிட்டு தேவா தன் தாயுடன் வீட்டைவிட்டு வெளியேறி போராட்டக்காரர்களுடன் இணைகிறான். அங்கு பாரதிக்கும் தேவாவுக்கும் திருமணம் நிச்சயமானாலும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்ற பிறகே தங்கள் திருமணம் நடக்கும் என்று உறுதியெடுத்துக் கொள்கிறான். அவர்களின் திருமணத்தைத் தடுக்க முயலும் ராஜதுரையின் முயற்சிகளை முறியடித்து தேவா அவனைக் கொல்ல முனைகையில் தேவாவைத் தடுக்கிறார் காந்திதாசன். ஆனாலும் ராஜதுரை மயில்சாமியால் கொல்லப்படுகிறான்.
நடிகர்கள்
[தொகு]- விஜய் - தேவா
- சிவகுமார் - காந்திதாசன்
- சுவாதி - பாரதி
- மனோரமா - ராசாத்தி
- மன்சூர் அலி கான் - ராஜதுரை (பெரியவர்)
- மணிவண்ணன் - மயில்சாமி
- வினு சக்கரவர்த்தி - காவல் துறை அதிகாரி
- எஸ். ஏ. சந்திரசேகர் - மாரிமுத்து
- குமரிமுத்து - ராஜதுரையின் வேலையாள்
- என்னத்த கன்னையா
- ஓ. ஏ. கே. சுந்தர்
- கோவை செந்தில் - கோவில் பூசாரி
படக்குழு
[தொகு]- திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்
- கதை - ஷோபா சந்திரசேகர்
- தயாரிப்பு - பி. விமல்
- இசை - தேவா
- ஒளிப்பதிவு - செல்வா. ஆர்
- படத்தொகுப்பு - கவுதம் ராஜு
- கலை - பி. எல். சண்முகம்
- சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன்
- பாடலாசிரியர்கள் - வாலி, புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன்
- நடனப்பயிற்சி - டி. கே. எஸ். பாபு, கலா, நசீர் பாபு
- உடைகள் - கே. எஸ். செய்யத் பாவா, எஸ். செல்வம்
- தயாரிப்பு நிறுவனம் - பி. வி. கம்பைன்ஸ்
இசை
[தொகு]படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வாலி, புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன்.
வ. எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | கால நீளம் |
---|---|---|---|---|
1 | ஐயயோ அலமேலு | வாலி | விஜய் | 4:47 |
2 | சின்ன பையன் | வாலி | எஸ். என். சுரேந்தர், கே.எஸ் சித்ரா | 4:42 |
3 | இன்னொரு காந்தி | புலமைப்பித்தன் | மனோ, எஸ். என். சுரேந்தர் | 4:17 |
4 | கோத்தகிரி குப்பம்மா | வாலி | விஜய், சுவர்ணலதா, மனோரமா | 5:02 |
5 | ஒரு கடிதம் (ஆண் குரல் ) | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், விஜய் | 5:06 |
6 | ஒரு கடிதம் (பெண் குரல்) | வாலி | கே. எஸ். சித்ரா | 4:58 |
7 | தேவா வர | வாலி | ஷோபா சந்திரசேகர், தேவா | 2:13 |
8 | மருமகனே | காளிதாசன் | தேவா, கிருஷ்ணராஜ் | 4:49 |
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்