பெரியண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியண்ணா 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா மற்றும் மானஸா துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் பரணி இசையமைத்துள்ளார்.[1][2] 1999ம் ஆண்டு 14ம் தேதி வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று வணீகரீதியாகவும் தோல்வியடைந்தது.

கதைச் சுருக்கம்[தொகு]

கதாநாயகனான சூர்யா தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்றதால் சிறையிலடைக்கப்படுகிறார். அப்பொழுது, ஒரு பெரிய கலெக்டருடைய மகளின் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார். அங்கு பாடும் சூர்யாவின் பாடலால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பாடல் கற்றுக்கொள்ள சிறப்பு அனுமதியும் பெற அவரது தந்தையை வலியுறுத்துகிறார். இந்த சூழலில், இருவரும் காதல் வயப்பட்டதால் காவல்துறை மற்றும் கலெக்டரும் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். அவர்கள் ஒரு பகல் வேளையில் ஒரு கிராமத்தை அடையும்போது கலெக்டர் ஒருவர் கொலைசெய்யபடுவதை காண்கிறனர், ஆனால் அந்த ஊர்மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். கலெக்டரை கொலை செய்தது அந்த ஊரின் தலைவன் என தெரிய வரும் பொழுது அவர்கள் அவரை எதிர்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவருடைய பழைய கால வாழ்க்கையை தெரிந்துகொண்டு அவரை புரிந்துகொள்கின்றனர். அவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கிறார். பெண்ணின் தந்தை அவர்களுக்கு எதிராக சட்ட அமைப்பை பயன்படுத்தி அவர்களை பிரிக்கமுயல்வதிற்கு எதிராக கிராம தலைவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

எஸ். ஏ. சந்திரசேகர் முதலில் விஜயகாந்துடன் இணைந்து விஜயை நடிக்கவைக்க இக்கதையை உருவாக்கினார் பின்னர் அது படமாக்க முடியாமல் போனது. பின்பு 1998 ம் ஆண்டு தொடங்கும்போது விஜய் பிஸியானதால் அவருடைய கதாபாத்திரத்திற்கு சூர்யாவை தேர்ந்தெடுத்து விஜயகாந்துடன் இணைந்து நடிக்கவைத்தார்.[3] நடிகை ரோஜாதான் முதலில் கதாநாயகியாக அணுகி பின்பு மீனாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஈஸ்வரி ராவின் தங்கையான மானஸா இன்னொரு கதாநாயாகியாக கங்கா பாத்திரத்தில் நடித்தார், இவர் காக்கை சிறகினிலே படம் மூலம் பிரபலமானவர்.[4]

1998 ம் ஆண்டு இறுதியில் விஜயகாந்த், சூர்யா நடிக்க எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஏ.எல்.அழகப்பன், இப்ராஹிம் ராவுத்தர் இணை தயாரிப்பில் இப்படம் வெளியானது.[5]

பாடல்கள்[தொகு]

விஜயின் பழைய படமான நாளைய தீர்ப்பு படத்தில் பாடல்களை எழுதிய பரணி இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். 7 பாடல்களை கொண்ட இந்த படத்தின் பாடல் வரிகளை பரணி, அறிவுமதி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6] சூர்யாவுக்காக நடிகர் விஜய் மூன்று பாடல்களை பாடியதில் நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து பாடலும் நிலவே நிலவே பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது.[7]

வெளியீடு[தொகு]

பெரியண்ணா திரைப்படம் சராசரி வசூலை பெற்றது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=periyanna[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2001-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010423182428/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani. 
  3. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/195584B7152B4B4365256940004C8B27[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://chandrag.tripod.com/index.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120609215317/http://www.indolink.com/tamil/cinema/News/99/February/pnews_20150.html. 
  6. http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115042014/http://starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=772. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120210005955/http://www.indolink.com/tamil/cinema/Specials/2000/tnyspecial.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியண்ணா&oldid=3711301" இருந்து மீள்விக்கப்பட்டது