உள்ளடக்கத்துக்குச் செல்

சீதா (1990 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புசோபா சந்திரசேகர்
சீலா சிவா
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (கதை)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுஇந்து சக்கரவர்த்தி
படத்தொகுப்புடீ. சியாம் முகர்ஜி
கலையகம்லலிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1990 (1990-04-14)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீதா (seetha) என்பது 1990 இல் வெளிவந்த தமிழில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் ரகுமான், கனகா, ஆர். சரத்குமார், கவுண்டமணி ஆகியோரும் அவர்களுடன் இணைந்து சரண்ராஜ், சனகராஜ், மனோரமா, ராதாரவி, எஸ். சங்கர், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சோபா சந்திரசேகர், சீலா சிவா ஆகியோர் தயாரித்திருந்தனர். வித்தியாசாகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மற்றும் ஏப்ரல் 14, 1990ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3] இத்திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அதே பெயரில் வெளிவந்துள்ளது.[4]

கதைச்சுருக்கம்[தொகு]

கதையின் ஆரம்பம் சீதா (கனகா) தனது படிப்பையெல்லாம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்புவதுடன் ஆரம்பிக்கிறது. சீதாவின் குடும்பம் அவ்வூரின் ஜமீந்தாரின் மகனான பூபதி அவர்களின் குடும்பத்தில் தலையிடும் வரை மகிழ்ச்சிகரமானதாகவே காணப்படுகிறது. பூபதியின் ரௌடித்தனத்தால் அவ்வூர் மக்கள் அவன் மீது பயத்தில் வாழ்த்தனர். பூபதி சீதாவை திருமணம் செய்ய விரும்ப சீதாவோ அவனை நிராகரித்தாள். இதனால் ஆத்திரமடைந்த பூபதி அவளுடைய தந்தையை கொன்றான். இதனால் பயந்து போன சீதாவும் அவளது அம்மாவும் ஊரைவிட்டு போவதற்கு முடிவு செய்கின்றனர். சீதாவிற்கு நகரத்தில் ஒர் வாடகை வீடும், நல்ல வேலையும் கிடைக்கின்றது. ஆனால் பூபதி அவர்களை விட்டபாடில்லை. ஒர் நாள் காவல் அதிகாரி விஜய் (ரகுமான்) சீதாவை காப்பாற்ற இருவரும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணத்தின் பின்னர் தான் சம்பந்தப்படாத ஓர் குற்றத்திற்கு கைதாகின்றான். ஊடகவியலாளரான ஜான்சி ராணி (கௌதமி) சீதாவிற்கு உதவ முன் வருகின்றார். ஆனால் ஜான்சியின் கணவனும் அவனோடு ஊழல்வாதி அரசியல் வாதியும் பூபதியுடன் கைகோய்க்கின்றனர். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் உள்ள பாடல்வரிகளை வாலி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். இத்திரைப்படத்தில் 5 பாடல்கள் அமைந்துள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sita (1990)". gomolo.com. Archived from the original on 20 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Seetha (1990) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  3. "Seeta (S.A. Chandrasekhar)". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  4. https://www.youtube.com/watch?v=TJ_NOhkoWU8
  5. "Seetha (1990)". mio.to. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_(1990_திரைப்படம்)&oldid=3686922" இலிருந்து மீள்விக்கப்பட்டது