ராதாரவி
Appearance
ராதாரவி | |
---|---|
ராதாரவி 2016ஆம் ஆண்டு ௭டுத்த புகைப்படம் | |
பிறப்பு | மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் ரவி 29 சூலை 1952[1] திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ் மாகாணம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | புதுக்கல்லூரி, சென்னை |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1976 – நடப்பு |
உயரம் | 1.68m |
அரசியல் கட்சி | பா.ஜ.க |
பெற்றோர் | எம். ஆர். ராதா தனலட்சுமியம்மாள் |
உறவினர்கள் | வாசு விக்ரம் (nephew), எம். ஆர். ஆர். வாசு (தம்பி) ரதிகலா (தங்கை), ராதிகா (half-sister), நிரோசா (half-sister), ராஜூ ராதா (half-brother), மோகன் ராதா (half-brother) |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | வி. பெருமாள் |
பின்னவர் | ஜி. செந்தமிழன் |
தொகுதி | சைதாப்பேட்டை |
ராதாரவி ஒரு தமிழ் நாட்டு நடிகரும், பா.ஜ.க அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்[2].
வாழ்க்கை குறிப்பு
[தொகு]- இவர் ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம். ஆர். ஆர். வாசு என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
- இவருடைய தந்தை எம்.ஆர்.ராதா அவர்களின் மற்றொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா ஆவார்கள். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார்.
- மேலும் வி. கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.வாசு, டி.கே.சந்திரன் மற்றும் யுஏஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்தார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால்.
- இவர் 1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான முதல் திரைப்படமாக அமைந்தது.
- மேலும் தமிழ் திரையுலகில் டி. ராஜேந்தரரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
- பின்பு வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்னத் தம்பி, பூவேலி , உழைப்பாளி, குரு சிஷ்யன் என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார்.
- இவர் தங்கை ராதிகாவின் தயாரிப்பான செல்லமே எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்திருந்தார்.
ராதாரவி நடித்துள்ள திரைப்படங்கள்
[தொகு]- மன்மதலீலை
- வீட்டுக்காரி
- காதல் ஓவியம்
- உயிருள்ளவரை உஷா
- சிவப்பு சூரியன்
- சூரக்கோட்டை சிங்கக்குட்டி
- பொய்கால் குதிரை
- இரு மேதைகள்
- மதுரை சூரன்
- அண்ணாமலை
- வீரன் வேலுத்தம்பி
- சின்ன முத்து
- அமரன்
- மருது
- பூமகள் ஊர்வலம்
- என்றென்றும் காதல்
தொலைக்காட்சியில்
[தொகு]நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்
[தொகு]- கடமை கண்ணியம் கட்டுப்பாடு
- சுரல
- சேது சமுத்திரம் [3]
- நல்வரவு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Profile of Actor Radha Ravi – Tamil Movie Data Base of. Tamilstar.com (29 July 1952). Retrieved on 30 December 2016.
- ↑ இராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/59778.html