அமரன் (1992 திரைப்படம்)
தோற்றம்
(அமரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமரன் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. இராஜேஸ்வர் |
தயாரிப்பு | கே. இராஜேஸ்வர் |
கதை | கே. ராஜேஸ்வர் |
இசை | ஆதித்யன் விஸ்வ குரு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ரகு பாபு |
கலையகம் | அனலக்சுமி பிலிம்ஸ் |
விநியோகம் | அனலக்சுமி பிலிம்ஸ் |
வெளியீடு | 15 சனவரி 1992 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
அமரன் (Amaran) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. இராஜேசுவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, ஆகியோர் நடித்திருந்தனர். பிறைசூடன், வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு ஆதித்தியன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக் - அமரன்
- பானுப்ரியா - சிவகாமி
- ராதாரவி - ஆண்டவ பெருமாள்
- பிரதாப் போத்தன் - இராஜவர்மா
- சம்மி கபூர் - டான் மிராண்டா
- விஜயகுமார் - "சிபோய்" கோவிந்தன், அமரனின் வளர்ப்புத் தந்தை
- மஞ்சுளா விஜயகுமார் - அமரனின் வளர்ப்புத் தாய்
- லிவிங்ஸ்டன் (இரஞ்சன்)- ஆய்வாளர் துரைபாண்டி, அமரனின் தந்தை
- உதய் பிரகாஷ் - சின்ன பெருமாள்
- சில்க் ஸ்மிதா - மங்கா
- டிஸ்கோ சாந்தி - சாந்தி
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- இலதா
- இரா. சங்கரன் - ஜின்னாவின் தந்தை
- பிறைசூடன் - சோதிடர்
- விகாஷ் ரிசி - ஜின்னா
- மகிமா
- கே. இராஜ்பிரீத்
- சிட்டி
- குழந்தை வசந்த்
- குழந்தை அனிதா
- இராசேந்திரன் - அடியாள்
பாடல்கள்
[தொகு]தமிழ்ப் பதிப்பு
[தொகு]திரைப்படத்தின் பாடல்கள் 1992 ஆம் ஆண்டு ஆதித்தியன் இசையில் வெளியானது. இத்திரைப்படத்தின் எட்டுப் பாடல்களை பிறைசூடன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]
எண் | பாடல் | பாடகர்கள் | நேரம் |
---|---|---|---|
1 | "வெத்தல போட்ட" | கார்த்திக் | 4:33 |
2 | "ட்ரிங் ட்ரிங்" | ஸ்ரீவித்யா | 4:13 |
3 | "சந்திரரே சூரியரே" - | கே. ஜே. யேசுதாஸ் | 4:40 |
4 | "வசந்தமே அருகில் வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:47 |
5 | "முஸ்தபா முஸ்தபா" - Viswa Guru | கார்த்திக் | 4:41 |
6 | "சந்திரனே சூரியனே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:40 |
7 | "Paanja Janiyam Oothiduvaen" | டி. எம். சௌந்தரராஜன் | 3:38 |
8 | "Abhyam Krishna Naragaasuran" | சீர்காழி சிவசிதம்பரம், டி. கே. கலா | 2:51 |
தெலுங்குப் பதிப்பு
[தொகு]இந்தப் படம் தெலுங்கில் "அமர்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2] பாடல் வரிகளை ராஜஸ்ரீ எழுதியுள்ளார்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | நேரம் |
---|---|---|---|
1 | "வசந்தமா சேரவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:48 |
2 | "சக்கனைன சுக்கல்லர" | எஸ். பி. பாலசுப்பரமணியம் | 4:48 |
3 | "முஸ்தபா முஸ்தபா" | எஸ். பி. பாலசுப்பரமணியம் | 4:51 |
4 | "தமலபாகு ஷோகிலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:51 |
5 | "சக்கனைன சுக்கல்லர" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:30 |
6 | "கல்லா பஜாரு" | கே. எஸ். சித்ரா | 4:31 |
வெளியீடு
[தொகு]இந்தப் படம் தெலுங்கில் "அமர்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4]