பிறைசூடன்
பிறைசூடன் | |
---|---|
பிறப்பு | சந்திரசேகரன் பெப்ரவரி 6, 1956[1] நன்னிலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 8 அக்டோபர் 2021 சென்னை, இந்தியா | (அகவை 65)
பணி | நடிகர், கவிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1980-2021 |
பிறைசூடன் (Piraisoodan, 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.[2] இவர் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[3][4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.[5][6]. இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.[7]
தொடக்கம்
[தொகு]பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார்.[8] அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.
இயற்றிய சில பாடல்கள்
[தொகு]வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்(கள்) | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | 1984 | சிறை | ராசாத்தி ரோசாப்பூவே | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | ம. சு. விசுவநாதன் | முதற்பாடல் |
2 | 1991 | கோபுர வாசலிலே | காதல் கவிதைகள் படித்திடும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | இளையராஜா | |
கேளடி ௭ன் பாவையே | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | |||||
நாதம் ௭ழுந்ததடி | எஸ். ஜானகி | |||||
3 | 1991 | இதயம் | இதயமே இதயமே உன் | ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | இத்திரைப்படத்தில் மற்ற பாடல்கள் வாலி இயற்றியது |
பாடலாசிரியர் பணி
[தொகு]1980களில்
[தொகு]- 1984- சிறை
- 1988- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
- 1989- என்னெப் பெத்த ராசா
- 1989- என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
1990களில்
[தொகு]- 1990- கேளடி கண்மணி
- 1990- அதிசயப் பிறவி
- 1990- சிறையில் பூத்த சின்னமலர்
- 1990- பெரிய வீட்டு பணக்காரன்
- 1990- பணக்காரன்
- 1990- ராஜா கைய வச்சா
- 1991- ஈரமான ரோஜாவே
- 1991- என் ராசாவின் மனசிலே
- 1991- கேப்டன் பிரபாகரன்
- 1991- இதயம்
- 1991- கோபுர வாசலிலே
- 1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
- 1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
- 1992- ௭ன்றென்றும் அன்புடன்
- 1992- அமரன்
- 1992- நாடோடி பாட்டுக்காரன்
- 1996- தாயகம்
- 1996- லக்கி மேன்
- 1997- ஹரிச்சந்திரா
- 1997- தம்பி துரை
- 1998- ௭ங்க ஊரு ராசாத்தி
2000த்தில்
[தொகு]- 2001- ஸ்டார்
- 2001- சிகாமணி ரமாமணி
- 2004- மனதில்
- 2006- அமிர்தம்
- 2007- அடாவடி
- 2008- கொடைக்கானல்
- 2008- சிங்கக்குட்டி
2010களில்
[தொகு]- 2010- உனக்காக ௭ன் காதல்
- 2011- வட்டப்பாறை
- 2012- நாச்சியார்புறம்
- 2012- இளமை ஊஞ்சல்
- 2012- கஜன்
- 2013- மாசாணி
- 2013- உள்ளமெல்லாம் தள்ளாடுதே
- 2013- ஆர்யா சூர்யா
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- 2014: சதுரங்க வேட்டை
- 2016: புகழ்
வசனம் எழுதியது
[தொகு]- 2011:ஸ்ரீ ராமராஜ்ஜியம்
மறைவு
[தொகு]உடல்நலக் குறைவு காரணமாக இவர், சென்னையில் 2021 அக்டோபர் 8 அன்று காலமானார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.nadigarsangam.org/member/piraisoodan/
- ↑ "Behindwoods : Lyricist Piraisoodan returns for Deva". பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
- ↑ "கம்பீரக் கவிஞன் பிறைசூடன் - Kungumam Tamil Weekly Magazine". http://kungumam.co.in/newkungumam/VArticalinnerdetail.aspx?id=6054&id1=124&issue=20151221.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "றேடியோஸ்பதி:இளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை". http://www.radiospathy.com/2016/02/blog-post.html?m=1.
- ↑ "கவிஞர் பிறைசூடன் மகன் இசையமைப்பாளர் ஆனார்". http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2014/06/11134100/PoetPiraisutanSonComposerBecame.vpf.
- ↑ "மங்கலமான சொற்கள் கொண்ட திரைப்பாடல்களும் இலக்கியமே! பாடலாசிரியர் பிறைசூடன் - Dinamani - Tamil Daily News". http://www.dinamani.com/cinema/article1492103.ece.
- ↑ "தமிழ்த் புத்தாண்டு விருதுகள் - 2015" இம் மூலத்தில் இருந்து 2015-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150511040014/http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=23403.
- ↑ "௭ம் ௭ஸ் வி பெயரில் விருது". http://www.magzter.com/news/219/424/082015/fj2qg.
- ↑ "பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார் - தினமணி". 8 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help)