உள்ளடக்கத்துக்குச் செல்

அமரன் (2024 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரன்
படத்தின் முதல் சுவரொட்டி
இயக்கம்இராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்பு
திரைக்கதைஇராஜ்குமார் பெரியசாமி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுசி. எச். சாய்
படத்தொகுப்புஆர். கலைவாணன்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமதிப்பீடு 100 கோடி[1][2]
மொத்த வருவாய்மதிப்பீடு 335 கோடி[3][4]

அமரன் (Amaran) இராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024இல் வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.

சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக நடிக்கும் 21வது படம் என்பதால் #SK21 என்ற தற்காலிகத் தலைப்பில் சனவரி 2022 இல் இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு பிப்ரவரி 2024 இல் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி மே 2023 இல் தொடங்கியது. தற்போது காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி. எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கதைச் சுருக்கம்

[தொகு]

இந்து ரெபெக்கா வர்கீஸ் தனது மகள் அர்ஷேயா முகுந்துடன் புது தில்லி செல்கிறார். அவருடன் மாமனார் வரதராஜனும் மாமியார் கீதா வரதராஜனும் செல்கிறார்கள். இந்துவின் கணவர் முகுந்த் வரதராஜனுக்கு மரணத்திற்குப் பின் அசோகச் சக்கர விருது வழங்கப்படுகிறது. அதைப் பெறுவதற்காகவே இந்த பயணம். இந்து தனது காதலுடன் என்றென்றும் தொலைதூர உறவில் இருப்பதாக உணர்கிறார். அவர் முகுந்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

இந்து சென்னையில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடங்குகிறார். அங்கு முகுந்த் அவரது மூத்தவராக இருக்கிறார். ஒரு அழகுநயப்புக் காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இந்து அந்த நிகழ்ச்சியில் வடிவழகியாக இந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தனது கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். முதலில் அவர் பங்கேற்க தயங்குகிறார். ஆனால் முகுந்த் அவருக்கு உதவியாக இருக்கிறார். அவர் இந்துவை சம்மதிக்க வைக்கிறார். இறுதியில் இந்து போட்டியில் வெற்றி பெறுகிறார். அவர் முகுந்துக்கு நன்றி தெரிவிக்கிறார். அவர்களுக்கு இடையே காதல் மலரத் தொடங்குகிறது.

பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்து ஒரு முக்கியமான விஷயத்தை அறிகிறார். முகுந்த் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறார். ஆனால் அவரது தாயார் கீதா இதை அறிந்து எதிர்க்கிறார். இருப்பினும் முகுந்த் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்துவும் வரதராஜனும் அவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள். முகுந்த் அதிகாரிகள் பயிற்சிக் கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுகிறார்.

பயிற்சிக்குப் பிறகு முகுந்த் ராணுவத்தில் பணியாற்றத் தொடங்குகிறார். இந்து அவரது குடும்பத்தினரைச் சந்திக்கிறார். ஆனால் முகுந்தின் தாயார் கீதா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மாமனார் வரதராஜனும் முகுந்தின் சகோதரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். பல மாத கடின பயிற்சிக்குப் பிறகு முகுந்த் பதவி உயர்வு பெறுகிறார். அவர் மரைகுழல் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சியாளராக மாவ்கானில் பணியாற்றுகிறார்.

இந்து தனது குடும்பத்திடம் முகுந்தைப் பற்றி சொல்கிறார். அவரது தந்தை ஜார்ஜ் வர்கீஸ் கோபப்படுகிறார். அவரது இரண்டாவது அண்ணன் தீபுவும் எதிர்ப்பு காட்டுகிறார். முகுந்த் ஒரு தமிழர் என்பதும் ராணுவ அதிகாரி என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. பதற்றம் அதிகரிக்கிறது. ஜார்ஜ் முகுந்தின் கமாண்டிங் ஆஃபிசரிடம் புகார் செய்கிறார். இதனால் முகுந்த் கோபமடைகிறார். இறுதியில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். இந்து மனம் உடைகிறார்.

ஒரு வருட மௌனத்திற்குப் பிறகு இரு குடும்பங்களும் சம்மதிக்கின்றன. 2009 ஜூன் 30 அன்று அவர்கள் திருமணம் செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறார். அவளுக்கு அர்ஷேயா என்று பெயர் வைக்கிறார்கள். அது 2011 மார்ச் 17 ஆம் தேதி நடக்கிறது. முகுந்த் கேப்டனாக பதவி உயர்வு பெறுகிறார். அவர் ஐக்கிய நாடுகள் சிரியா-லெபனான் எல்லை பணியில் பணியாற்றுகிறார்.

2012 அக்டோபர் 18 அன்று முகுந்த் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையணியில் பணியேற்கிறார். அவர் 44வது படைப்பிரிவில் நியமிக்கப்படுகிறார். அங்கு அவர் கவுண்டர் அசால்ட் டீம் (CAT) உடன் பணியாற்றுகிறார். அவரது தளத்தலைவர் பேரரையர் அமித் சிங் தபாஸ் ஆவார். காஷ்மீர்த்தில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி அல்தாஃப் பாபாவைப் பற்றி அவர் அறிகிறார். முகுந்த் காஷ்மீரின் உள்ளே செல்கிறார். அவர் அல்தாஃப் பாபாவின் தந்தை அப்துல் கிலானியை சந்திக்கிறார். ஆனால் அவர் தனது மகன் பயங்கரவாதி என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

பல மாத தகவல் சேகரிப்பிற்குப் பிறகு முகுந்தும் அவரது CAT குழுவும் அல்தாஃப் பாபாவை 2013 சூனில் கொல்கிறார்கள். அவரது வீரம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர் சேனா பதக்கம் ஏற்க மறுக்கிறார். பின்னர் மற்றொரு பயங்கரவாதி ஆசிஃப் வானி தோன்றுகிறார். அவரைத் தேடும் பணி தொடர்கிறது. ஒரு பயிற்சியின்போது தவறுதலாக முகுந்த் புண்படுகிறார். அவர் கேரளாவில் சிகிச்சை பெறுகிறார். அங்கு இந்துவும் அர்ஷேயாவும் அவருடன் நேரம் செலவிடுகிறார்கள். இந்து அவரது காயத்தைப் பார்த்து அழுகிறார். முகுந்த் அவளிடம் ஒரு உறுதிமொழி வாங்குகிறார். அவர் இறந்தாலும் அவள் அழக்கூடாது என்று கேட்கிறார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு முகுந்த் பணிக்குத் திரும்புகிறார். ஆனால் ஆசிஃப் வானியால் அவரது தகவலாளர் லத்தீஃப் கொல்லப்படுகிறார். பின்னர் வானி முகுந்தை தாக்குகிறார். ஒரு மோதலில் முகுந்த் புண்படுகிறார். அவர் அதிக உதிரம் இழக்கிறார். இறுதியில் அவர் உயிரிழக்கிறார். 2015 ஜனவரி 26 அன்று இந்து அசோக சக்ரா விருதைப் பெறுகிறார். முகுந்தின் வீரம் நினைவுகூரப்படுகிறது. 2015 ஜூன் 1 அன்று சென்னையில் அவரது சிலை திறக்கப்படுகிறது. இந்து அவரது ஆன்மாவை உணர்கிறார். அது அவளுடனும் அர்ஷேயாவுடனும் என்றென்றும் இருக்கும் என்று நம்புகிறார்.

நடிகர்கள்

[தொகு]
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்

பாடல்கள்

[தொகு]

சிவகார்த்திகேயன், இராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் இணைந்து ஜி. வி. பிரகாஷ் குமார் முதல் தடவையாக இசையமைத்துள்ளார். இசை உரிமையை சரிகம வாங்கியது.[5] ஜென் மார்ட்டின் இசையமைத்த முகரத் புஜா காணொளி 2023 மே 5 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படப் பாடல்களில் ஜென் மார்ட்டின், சத்திய நாராயணன், மதுவந்தி கணேஷ், இரமணி ஆகியோரின் குரல்களும், விஷ்ணு எடவன் எழுதிய பாடல்களும் இடம்பெற்றுள்ளது.[6] படத்தில் சில வேகமான நடனப் பாடல்கள் இருப்பதாக இராஜ்குமார் கூறினார்.[7] சூன் மாதத்தின் இடையில், படத்தின் இசை வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.[8] முதல் தனிப்பாடலான "ஹே மின்னலே" அக்டோபர் 4 அன்று வெளியிடப்பட்டது.[9] இரண்டாவது தனிப்பாடலான "வெண்ணிலவு சாரல்" அக்டோபர் 17 அன்று வெளியிடப்பட்டது.[10] இசை வெளியீட்டு விழா 2024 அக்டோபர் 18 அன்று சென்னையிலுள்ள சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.[11] மூன்றாவது தனிப்பாடலான "உயிரே" 2024 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது.[12]  திரைப்படத்தில் கூடுதலாகச் சேர்த்த பாடல்களில் நான்காவது தனிப்பாடலாக "வானே வானே" என்ற பாடலும், ஐந்தாவது தனிப்பாடலாக "அமரா" என்ற பாடலும், 2024 நவம்பர் 9, 11 தேதிகள் முறையே வெளியிடப்பட்டது.[13][14]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சாய் பல்லவி அறிமுகம்"  கருவி யிசை 1:02
2. "ஏ மின்னலே"  கார்த்திக் நேத்தாஹரிசரண், சுவேதா மோகன் 3:50
3. "வெண்ணிலவு சாரல்"  யுகபாரதிகபில் கபிலன், இரக்சிதா சுரேஷ் 3:36
4. "போர் வீரன்"  அறிவுஅறிவு 3:15
5. "உயிரே"  விவேக்நகுல் அப்பியாங்கர், இரம்யா பட்டு அப்பியாங்கர் 3:33
6. "வானே வானே"  யுகபாரதிபைசல் இராசி 4:48
7. "அமரா"  அறிவுஅறிவு 2:49
8. "கனவே"  யுகபாரதிசைந்தவி 3:55
மொத்த நீளம்:
26:48
நீடிக்கப்பட்ட இசைத்தடம்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
9. "நகரும் நேரமே"  புன்னியா பிரதீப் 1:13

வெளியீடு

[தொகு]

இத்திரைப்படம் 2024 அக்டோபர் 31 தீபாவளியன்று வெளியிடப்பட்டது. முன்பாக இத்திரைப்படம் ஆகத்து 24 அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.[15] இராஜ்குமார் 2024 இன் மத்தியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியதை அடுத்து [16] தொலைக்காட்சி உரிமையை நெற்ஃபிளிக்சு வாங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது.[17][18]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "ராணுவ வீரரின் ‘பயோபிக்' என்பதால், படம் ராணுவத்தின் பக்கம் மட்டுமே சொல்லப்படுகிறது. காஷ்மீர் மக்களின் வலியையும் உணர்வுபூர்வமான போராட்டங்களையும் பதிவு செய்யாமல் பாயின்ட் ப்ளாங்கில் ‘தீவிரவாதத்தை' மட்டுமே குறிவைத்திருக்கின்றனர்... உணர்வுபூர்வமான குடும்பக் காட்சிகளாலும் தேர்ந்த திரையாக்கத்தாலும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செய்தவிதத்தில் அமரகாவியமாகியிருக்கிறது ‘அமரன்!'" என்று எழுதி 45/100 மதிப்பெண்களை வழங்கினர்.[19]

சர்ச்சை

[தொகு]

2024 பிப்ரவரி 21 அன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட விளம்பர முன்னோட்டத்தில் முஸ்லிம்களை "மோசமாக" சித்தரிப்பதாகக் கூறி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் கடலூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.[20][21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. M, Marimuthu (25 May 2024). "Amaran: 'துப்பாக்கி ஏந்தி நின்னான்பாரு..': நிறைவுபெற்ற சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் படப்பிடிப்பு". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 17 July 2024. Retrieved 17 July 2024.
  2. "How much did Sai Pallavi charge for Sivakarthikeyan's biographical action war movie Amaran?". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-10-29. Retrieved 2024-11-03.
  3. "Amaran Box Office Update: Sivakarthikeyan and Sai Pallavi movie crosses MASSIVE Rs 200 crore worldwide". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-11-09. Retrieved 2024-11-09.
  4. "Amaran Beats Rajinikanth's Vettaiyan At Tamil Nadu Box Office, Hits Rs 200 Crore Globally In 10 Days". News18 (in ஆங்கிலம்). Retrieved 2024-11-09.
  5. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் [RKFI]. "Soldiers protect us Music uplifts us! Happy to be associated with @saregamasouth for #Amaran" (Tweet). Retrieved 2 ஆகத்து 2024. Missing or empty |date= (help)
  6. SK21 | Ulaganayagan Kamal Haasan | SPIP | Sivakarthikeyan | Rajkumar Periasamy | GV Prakash (in ஆங்கிலம்). Turmeric Media. 5 மே 2023. Archived from the original on 24 பெப்பிரவரி 2024. Retrieved 24 பெப்பிரவரி 2024 – via யூடியூப். {{cite AV media}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "Amaran: Director Rajkumar Periasamy talks about Sai Pallavi's role in Sivakarthikeyan starrer". Pinkvilla (in ஆங்கிலம்). 23 February 2024. Archived from the original on 25 பெப்பிரவரி 2024. Retrieved 25 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "GV Prakash teases first single release from Vikram's 'Thangalaan'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 June 2024 இம் மூலத்தில் இருந்து 13 சூன் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613011945/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/gv-prakash-teases-first-single-release-from-vikrams-thangalaan/articleshow/110930485.cms. 
  9. "உருக வைக்கும் அமரன் படத்தின் முதல் மெலடி பாடல்!". டைம்ஸ் நவ். 4 October 2024. Archived from the original on 6 October 2024. Retrieved 4 October 2024.
  10. B, Jayabhuvaneshwari (17 October 2024). "'Vennilavu Saaral' song from Sivakarthikeyan's Amaran out". சினிமா எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 17 October 2024.
  11. "Mani Ratnam to Sai Pallavi at Amaran audio launch: Hope to work with you one day". India Today (in ஆங்கிலம்). 2024-10-21. Retrieved 2024-10-29.
  12. M, Narayani (2024-10-30). "'Uyirey' song from Sivakarthikeyan-Sai Pallavi's Amaran out". சினிமா எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 2024-10-30.
  13. G. V. Prakash (2024-11-08). Vaane Vaane (From "Amaran") (Tamil). Retrieved 2024-11-09 – via YouTube.
  14. Arivu - Topic (2024-11-11). Amara (From "Amaran") (Tamil). Retrieved 2024-11-14 – via YouTube.
  15. "Director Rajkumar Periasamy reveals Sai Pallavi plays a challenging role in 'Amaran'". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/director-rajkumar-periasamy-reveals-sai-pallavis-challenging-role-in-amaran/articleshow/107959995.cms. 
  16. Sivakarthikeyan's Multiple Look in Amaran,Kashmir Shooting Diaries - Rajkumar Periasamy | SaiPallavi (in ஆங்கிலம்), archived from the original on 23 February 2024, retrieved 2024-02-23
  17. "Amaran: Sivakarthikeyan's title teaser & all about Major Mukund Varadarajan". Moviecrow. 16 February 2024. Archived from the original on 17 February 2024. Retrieved 16 February 2024.
  18. Express, Team Cinema (2024-02-16). "WATCH | Sivakarthikeyan dons army uniform in 'Amaran', teaser out". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-02-24.
  19. விமர்சனக்குழு, விகடன் (2024-11-06). "அமரன் - சினிமா விமர்சனம்". விகடன். Retrieved 2025-06-17.
  20. "Protests in Tamil Nadu over portrayal of Muslims in teaser of Sivakarthikeyan film 'Amaran'". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 22 February 2024. Archived from the original on 22 February 2024. Retrieved 22 February 2024.
  21. "Protests erupt in TN over ‘derogatory’ portrayal of Muslims in Sivakarthikeyan's 'Amaran' teaser". 2024-02-23. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/protests-erupt-in-tn-over-derogatory-portrayal-of-muslims-in-sivakarthikeyans-amaran-teaser/articleshow/107935721.cms?_gl=1*m189x4*_ga*TFFOWE1oaks4ZDg0eTRfWXNXSk9WQjlwSS04NnZBZHBGalNyLUVCYkw4S3hNejV5X3JPX1Rua04zREVHUGdJWA... 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரன்_(2024_திரைப்படம்)&oldid=4351048" இலிருந்து மீள்விக்கப்பட்டது