வி. கே. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வி. கே. இராமசாமி
பிறப்பு 1926
விருதுநகர், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 24 திசம்பர் 2002
சென்னை
பணி நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 1947 - 2002

வி. கே. ராமசாமி (பிறப்பு:1926 - இறப்பு: திசம்பர் 24, 2002) ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவரது கடைசிப் படம் டும் டும் டும் ஆகும்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

குடும்பம்[தொகு]

அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

தமிழக அரசின் கலைமாமணி விருது, 1970

உசாத்துணை[தொகு]

வி. கே. இராமசாமி மறைவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._ராமசாமி&oldid=1997673" இருந்து மீள்விக்கப்பட்டது