மௌன ராகம்
மௌன ராகம் | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | ஜி.வெங்கடேஷ்வரன் |
கதை | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் மோகன் ரேவதி வி.கே ராமசாமி |
விநியோகம் | சுஜாதா பிலிம்ஸ் |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மௌன ராகம் (Mouna Ragam) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.[1]
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி), தனது காதலன் கார்த்திக்கை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரிடமிருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார். அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.
நடிகர்கள்[தொகு]
- மோகன்- சந்திரகுமார்
- ரேவதி- திவ்யா
- கார்த்திக்- மனோகர்
- வி. கே. ராமசாமி- சந்திரகுமாரின் முதலாளி
- இரா. சங்கரன் - சந்திரமௌலி
- பாஸ்கர்- திவ்யாவின் சகோதரன்
- காஞ்சனா - வழக்கறிஞர்
- வாணி- ஜானகி
- கலைசெல்வி- திவ்யாவின் சகோதரி
- சோனியா - திவ்யாவின் சகோதரி
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஓகோ மேகம் வந்ததோ" | எஸ். ஜானகி | 4:25 | |||||||
2. | "நிலாவே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:36 | |||||||
3. | "சின்ன சின்ன வண்ணக்குயில்" | எஸ். ஜானகி | 4:24 | |||||||
4. | "பனிவிழும் இரவு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:32 | |||||||
5. | "மன்றம் வந்த தென்றலுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!" (in ta). https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/221019-30.html.
- ↑ "Ilaiyaraaja - Mouna Raagam (Vinyl, LP)". 2019-07-23 இம் மூலத்தில் இருந்து 2019-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190723095642/https://www.discogs.com/Ilaiyaraaja-Mouna-Raagam/release/10810904.
- ↑ "Mouna Raagam Songs - Tamil Movie Songs - Raaga.com". 2014-10-16 இம் மூலத்தில் இருந்து 2014-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141016044643/http://play.raaga.com/tamil/album/mouna-raagam-T0000102.