உள்ளடக்கத்துக்குச் செல்

மாப்பிள்ளை (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாப்பிள்ளை
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புநேசனல் புரொடக்சன்ஸ்
கதைவி. என். சம்மந்தம்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
டி. ஆர். பாப்பா
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
சி. எஸ். பாண்டியன்
பி. வி. நரசிம்ம பாரதி
பி. எஸ். வீரப்பா
பி. கே. சரஸ்வதி
எம். சரோஜா
எம். எஸ். எஸ். பாக்கியம்
சி. கே. சரஸ்வதி
எம். என். ராஜம்
வெளியீடுநவம்பர் 7, 1952
ஓட்டம்.
நீளம்17647 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாப்பிள்ளை 1952 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[1] வி. என். சம்பத்தம் திரைக்கதை உரையாடல் எழுதிய இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கினார். இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இந்த படம் 1952, நவம்பர், 7 அன்று வெளியாகி வெற்றி பெற்றது.

கதை

[தொகு]

ஒரு அச்சகத்தில் அலுவலகப் பையனாக வேலைப் பார்க்கும் ஒரு ஏழை (டி. ஆர். இராமச்சந்திரன்) நல்வாய்பால் திடீர் பணக்காரனாக மாறுகிறான். அவன் வேலைபார்த்த அச்சக முதலாளியின் மகன் (டி. கே. இராமச்சந்திரன்) புதுப்பணக்காரனை அழித்து அவனது சவத்துக்களை அபகரிக்க சபதம் செய்கிறான். அது நடந்ததா இல்லையா என்பதே கதையாகும்.

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

மாப்பிள்ளை படத்தை டி.ஆர். ரகுநாத் இயக்கினார். வி. என். சம்பந்தம் திரைக்கதை உரையாடலை எழுதினார். நேஷனல் புரொடக்சன்ஸ் தயாரித்தது. பி. எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். ஏ. முருகேசன் படத்தொகுப்பு செய்தார். இந்தப் படம் நியூட்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. படத்தின் இறுதி நீளம் 17,647 அடி (5,379 மீ)17,647 அடிகள் (5,379 m).[4]

இசை

[தொகு]

படத்திற்கு டி. ஆர். பாப்பா, என். எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்தனர். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார். "டோசு கொடுக்க வேணும்" என்ற பாடல், காகா ராதாகிருஷ்ணனும், என். எம். ராஜமும் பாடுவதாக படமாக்கப்பட்டது.[3]

பாடல் பாடகர்/கள் இசை நீளம்
"காதல் விஞ்ஞானம்" ஏ. எம். இராஜா, பி. லீலா டி. ஆர். பாப்பா 03:04
"ஆல் ரைட்.... நானொரு இரகசியம் சொல்லவா" ஏ. ஜி. இரத்தினமாலா 02:39
"டோசு கொடுக்க வேணும்" திருச்சி லோகநாதன், ஏ. ஜி. இரத்தினமாலா என். எஸ். பாலகிருஷ்ணன் 03:21
"கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்" பி. லீலா 03:13
"மயங்காதே மதி" ஏ. பி. கோமளா 03:43
"சிறந்த உலகினிலே" பி. லீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி 06:24
"இராஜ குடும்பத்தில் பிறந்தோமடி" திருச்சி லோகநாதன், ஏ. ஜி. இரத்தினமாலா 02:31
"இன்பமே சிறிதும் அறியாத" பி. லீலா 01:10
"கண்ணீர்தான்.... பெண்ணாக பிறந்தால்" பி. லீலா 03:03

வெளியீடும் வரவேற்ப்பும்

[தொகு]

மாப்பிள்ளை 1952 நவம்பர் 7 அன்று வெளியாகி,[4] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MAPPILLAI (1952)". British Film Institute. Archived from the original on 25 January 2020. Retrieved 25 January 2020.
  2. ராண்டார் கை (4 மே 2013). "Maappillai (1952)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/maappillai-1952/article4683463.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Randor Guy (4 May 2013). "Maappillai (1952)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723140148/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/maappillai-1952/article4683463.ece. 
  4. 4.0 4.1 "1952 – மாப்பிள்ளை – நேஷனல் புரொடக்சன்ஸ்" [1952 – Maappillai – National Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 25 January 2020. Retrieved 25 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)