பி. கே. சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கே. சரஸ்வதி (1951)

பி. கே. சரஸ்வதி தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.

திரையுலக வாழ்க்கை[தொகு]

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எர்ணாகுளத்தை அடுத்த திருப்புணித்துறை என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1] பரவேலி என்பது இவரது இயற்பெயர். தந்தை குமாரன் நாயர் கொச்சி சமத்தானப் பட்டாளத்தில் பணியாற்றியவர்.[2] சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார் நாராயணி அம்மையாரின் பொறுப்பில் வளர்ந்தார்.[2] சிறுமியாக இருந்தபோது இவர் கொச்சி சமத்தான காங்கிரசு ஊர்வலத்தில் ஈடுபட்டதால் பள்ளியில் படிக்க சமத்தான அரசு அப்போது அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் ராஜநர்த்தகி என்ற இந்தித் திரைப்படத்திற்கு உலகப் புகழ் தேடித்தந்த பிரபல நடன ஆசிரியர் மாதவ மேனனிடம் சரசுவதியும் அவரது சகோதரி கமலாவும் கதகளி பயின்றனர். அப்போது அவருக்கு ஏழு வயது.[1]

பழசி ராஜா அல்லது வீர கேரளம், சாகுந்தலம் ஆகிய நாடிய நாடகங்களில் நடனமாடிப் புகழ் பெற்றார்.[1] இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று நடனமாடியுள்ளார். பம்பாயில் பிரசித்தமான 'சவன் ஆர்ட் சென்டர்' என்ற கலைக்கழகத்தில் பயின்று வெளியேறினார். உதயசங்கரின் கல்பனா மூலம் திரையுலகில் புகுந்த இவர் திருமழிசை ஆழ்வார், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்ற பல படங்களில் நடனமாடியும், உப பாத்திரங்களில் நடித்தும் வந்தார்.[1] வேலைக்காரி, இன்பவல்லி போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். ராஜாம்பாள் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நிலைக்கு முன்னேறினார்.[3] சகோதரி கமலாவும் சில படங்களில் உப பாத்திரங்களில் நடித்து வந்தார்.[1]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

  1. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)
  2. போஜன் (1948)
  3. திருமழிசை ஆழ்வார் (1948) (ஆதாரம் உள்ளது)
  4. இன்பவல்லி (1949)
  5. ராஜாம்பாள் (1951)
  6. அந்தமான் கைதி (1951)[4]
  7. மாணாவதி (1952)
  8. மாப்பிள்ளை (1952)
  9. அமரகவி (1952)
  10. உலகம் (1953)
  11. நாம் (1953)[5]
  12. இன்ஸ்பெக்டர் (1953)
  13. துளி விசம் (1954)
  14. நண்பன் (1954)
  15. நல்லவன் (1955)
  16. மூன்று பெண்கள் (1956)

குடும்பம்[தொகு]

எழுத்தாளரும் நடிகருமான வி. என். சம்பந்தம், இவரின் கணவராவார். சரஸ்வதி நடித்த மாப்பிள்ளை எனும் திரைப்படத்திற்கு சம்பந்தம் திரைக்கதையும், வசனமும் எழுதியிருந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 மாரதன் (அக்டோபர் 1948). "குமாரி சரஸ்வதி". பேசும் படம்: பக். 6. 
  2. 2.0 2.1 பார்சி (திசம்பர் 1949). "பி. கே. சரஸ்வதி". பேசும் படம்: பக். 11-22. 
  3. ராண்டார் கை (3 சனவரி 2009). "Rajambal 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  4. ராண்டார் கை (15 மே 2009). "Andhaman Kaithi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/andhaman-kaithi-1952/article3021487.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  5. ராண்டார் கை (29 டிசம்பர் 2012). "Naam (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/naam-1953/article4252688.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  6. ராண்டார் கை (4 மே 2013). "Maappillai (1952)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/maappillai-1952/article4683463.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._சரஸ்வதி&oldid=2317497" இலிருந்து மீள்விக்கப்பட்டது