பி. வி. நரசிம்மபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. வி. நரசிம்ம பாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. வி. நரசிம்ம பாரதி
அபிமன்யு (1948) திரைப்படத்தில் நரசிம்ம பாரதி
பிறப்பு24 மார்ச் 1923
மதுரை, இந்தியா
இறப்பு11 மே 1978
சென்னை, தமிழ்நாடு
அறியப்படுவதுநாடக, திரைப்பட நடிகர்

பி. வி. நரசிம்ம பாரதி (24 மார்ச் 1923 - 11 மே 1978)[1] சௌராட்டிர சமூகத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்த கலைஞர். 1947-இல் கன்னிகா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது நண்பரான பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜனுக்கு தான் நடித்த படங்களில் பின்னணி பாட, இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மதுரையைச் சேர்ந்த நரசிம்ம பாரதி சிறு வயதிலேயே நடிப்புத் திறமையைக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே சௌராட்டிர சபையில் சேர்ந்து அவர்கள் நடத்தி வந்த நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு பாரதி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[4] பின்னர் வெள்ளியங்குன்றம் ஜமீந்தார் ஆரம்பித்த பாய்ஸ் கம்பனியின் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார்.[4] இதன் பின்னர் புளியமாநகர் பி. எஸ். சுப்பா ரெட்டியாரின் கம்பனியில் சேர்ந்து மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். உலகப் போர் ஆரம்பித்த போது மலேயாவில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட கடைசிக் கப்பலில் நரசிம்ம பாரதியும் சேர்ந்து இந்தியா வந்து சேர்ந்தார்.[4]

திரைப்படங்களில் நடிப்பு[தொகு]

இந்தியா திரும்பிய பின்னர் பக்த மீராவில் (1945) சாது வேடத்தில் நடித்தார்.[4] ஜுப்பிட்டர் பிக்சர்சின் ஏ. எஸ். ஏ. சாமி இவருக்குத் தனது படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார். வால்மீகி திரைப்படத்தில் விட்டுணு, ராமன், வேடன் ஆகிய பாத்திரங்களிலும், ஸ்ரீ முருகனில் (1946) விட்டுணுவாகவும், கஞ்சன் படத்தில் குமாரசாமியாகவும், கன்னிகா (1947) படத்தில் நாரதராகவும் நடித்தார்.[4] இதன் பின்னர் நடித்த அபிமன்யுவில் (1948) கிருஷ்ணனாக நடித்தும் புகழ் பெற்றார்.[4] கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்திலும் கிருஷ்ணனாக நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம்
1947 கன்னிகா
1948 அபிமன்யு
1950 கிருஷ்ண விஜயம்
1950 திகம்பர சாமியார்
1950 பொன்முடி
1952 என் தங்கை
1952 மாப்பிள்ளை
1952 சின்னத்துரை
1953 மதன மோகினி
1953 முயற்சி
1953 திரும்பிப்பார்
1954 புதுயுகம்
1956 குடும்பவிளக்கு
1958 சம்பூர்ண ராமாயணம்
1960 நான் கண்ட சொர்க்கம்
1960 தோழன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "மறக்கப்பட்ட நடிகர்கள்". தி இந்து (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Guy, Randor (3 October 2008). "Blast from the Past - Ponmudi 1950". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081007002150/http://www.hindu.com/cp/2008/10/03/stories/2008100350341600.htm. பார்த்த நாள்: 2011-11-27. 
  3. http://antrukandamugam.wordpress.com/2013/11/30/p-v-narasimha-bharathi/
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 ராஜா (ஆகத்து 1948). "நரசிம்ம பாரதி". பேசும் படம்: பக். 16. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._நரசிம்மபாரதி&oldid=3685243" இலிருந்து மீள்விக்கப்பட்டது