சாலமன் பாப்பையா
Jump to navigation
Jump to search
சாலமன் பாப்பையா | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 22, 1936 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | மதுரை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | (இளங்கலைப் பட்டம்) மதுரை அமெரிக்கன் கல்லூரி, (முதுகலைப் பட்டம்) மதுரை தியாகராசர் கல்லூரி |
பணி | ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் |
அறியப்படுவது | பட்டிமன்ற நடுவர், இலக்கிய விளக்கவுரையாளர் |
சமயம் | கிறித்துவம் |
வாழ்க்கைத் துணை | திருமதி செயபாய் |
பிள்ளைகள் | ஒரு மகன், ஒரு மகள் |
சாலமன் பாப்பையா (பிறப்பு: பிப்ரவரி 22, 1936) மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் ஆவார். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில்[தொகு]
இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.