உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர்
சை. அப்துல் ரகுமான்
கவிக்கோ
பிறப்புஅப்துல் ரகுமான்
1937 நவம்பர் 9
மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை
இறப்புசூன் 02, 2017 (அகவை 80)[1]
சென்னை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அருள்வண்ணன்
கல்விகலை முதுவர்
முனைவர்
பணிபேராசிரியர்
பணியகம்இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி
அறியப்படுவதுசர்ரியலிசக் கவிதைகள்
சமயம்இஸ்லாம்
பெற்றோர்மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம்
பிள்ளைகள்மகன்; மகள்
வலைத்தளம்
கவிக்கோ

அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[2] எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்[3] ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்குப் பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிறப்பு

[தொகு]

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 9 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[4]

கல்வி

[தொகு]

அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

[தொகு]

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [5] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

வக்பு வாரிய தலைவராக

[தொகு]

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்

நூல்கள்

[தொகு]

படைத்தவை

[தொகு]
வ.எண்ஆண்டுநூல்வகைகுறிப்பு
011974பால்வீதி[6]கவிதை
021978நேயர் விருப்பம்கவிதை
031985கரைகளே நதியாவதில்லைகட்டுரைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
041986அவளுக்கு நிலா என்று பெயர்கட்டுரைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
051986முட்டைவாசிகள்கட்டுரைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
061986மரணம் முற்றுப்புள்ளி அல்லகட்டுரைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
071987விலங்குகள் இல்லாத கவிதைகட்டுரை
081987சொந்தச் சிறைகள்வசன கவிதைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
091989புதுக்கவிதையில் குறியீடுஆய்வுமுனைவர் பட்ட ஆய்வேடு
101989சுட்டுவிரல்பாடல்முத்தாரத்தில் வெளிவந்த தொடர்
111990கம்பனின் அரசியல் கோட்பாடுஆய்வுஅமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
121995ஆலாபனை[7]கவிதைசாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர்.
131998பித்தன்கவிதைகுங்குமத்தில் வெளிவந்த தொடர்
141998விதைபோல் விழுந்தவன்கவியரங்கக் கவிதைகள்அண்ணா கவியரங்கக் கவிதைகள்
151998முத்தமிழின் முகவரிகவியரங்கக் கவிதைகள்மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
161999பூப்படைந்த சப்தம்கட்டுரை
171999தொலைபேசிக் கண்ணீர்கட்டுரை
182003காற்று என் மனைவிகட்டுரை
192003உறங்கும் அழகிகட்டுரை
202003நெருப்பை அணைக்கும் நெருப்புகட்டுரை
212003பசி எந்தச் சாதிகட்டுரை
222003நிலவிலிருந்து வந்தவன்கட்டுரை
232003கடவுளின் முகவரிகட்டுரை
242003முத்தங்கள் ஓய்வதில்லைகட்டுரை
252004காக்கைச் சோறுகட்டுரை
262004சோதிமிகு நவகவிதைகட்டுரை
272004மின்மினிகளால் ஒரு கடிதம்கவிதைகஜல் கவிதைகள்
282005தாகூரின் 'சித்ரா'மொழிபெயர்ப்பு
292005ரகசிய பூகவிதை
302005சிலந்தியின் வீடுகட்டுரை
312005இது சிறகுகளின் நேரம்கட்டுரைசூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
322006இல்லையிலும் இருக்கிறான்கட்டுரை
332006பறவையின் பாதைகவிதை
342007இறந்ததால் பிறந்தவன்கவியரங்க கவிதைமுதல் தொகுதி
352008தட்டாதே திறந்திருக்கிறதுகட்டுரை
362010எம்மொழி செம்மொழிகட்டுரை
372010பூக்காலம்கட்டுரை
382011தேவகானம்கவிதை
39கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லைகவிதை
402013பாலை நிலாகவிதை
41நரம்பு அறுந்த யாழ்!: ஈழத்தமிழரின் கண்ணீர்க்கதைபயணக்கட்டுரை

நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்

[தொகு]
  • முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில்
  • கவியரங்கக் கவிதைகள்

பதிக்கப்பட்டவை

[தொகு]
  • குணங்குடியார் பாடற்கோவை
  • ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள்

விருதுகள்

[தொகு]

கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு:

வ.எண்ஆண்டுவிருதுவழங்கியவர்குறிப்பு
11986கவியரசர் பாரிவிழா விருதுகுன்றக்குடி அடிகளார்
21989தமிழன்னை விருதுதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது
31989பாரதிதாசன் விருதுதமிழக அரசு
41989கலைமாமணி விருதுதமிழக அரசு
51992அக்ஷர விருதுஅக்னி
61996சிற்பி அறக்கட்டளை விருதுகவிஞர் சிற்பி அறக்கட்டளை
71997கலைஞர் விருதுதி. மு,க.ஒரு இலட்சம் ரூபாய்
81998ராணா இலக்கிய விருது
91999சாகித்ய அகாடமி விருதுசாகித்ய அகாடமி, டெல்லிஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது
102006கம்ப காவலர்கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
112007பொதிகை விருதுபொதிகை தொலைக்காட்சி, சென்னை
122007கம்பர் விருதுகம்பன் கழகம், சென்னை
132007சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசுதினத்தந்தி நாளிதழ்ஒரு இலட்சம் ரூபாய்
142008உமறுப் புலவர் விருதுதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைஒரு இலட்சம் ரூபாய்

அரசு விழா

[தொகு]

அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 9 ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். [8]

நூல்கள் நாட்டுடமையாக்கம்

[தொகு]

அப்துல் ரகுமான் எழுதிய 41 நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் என்று 2025 ஏப்ரல் 5 அன்று அறிவிக்கப்பட்டது.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வெ.நீலகண்டன். "கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்! #RIP". www.vikatan.com/. Retrieved 2021-04-05.
  2. "அப்துல் ரகுமான் – பவள விழா". www.jeyamohan.in. Retrieved 2021-04-05.
  3. "கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-04-05.
  4. "அப்துல் ரகுமான் 10". Hindu Tamil Thisai. Retrieved 2021-04-05.
  5. (1) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, (2) சென்னை புதுக்கல்லூரி, (3) வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி, (4) திருச்சி ஜமால் முகமது கல்லூரி (5) இசுலாமியா கல்லூரி, வேலூர்
  6. Akilan, Mayura (2017-06-02). "பால்வீதியில் தொடங்கிய பயணம்... பன்மொழிக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்". tamil.oneindia.com. Retrieved 2021-04-05.
  7. "கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!". Indian Express Tamil. Retrieved 2021-04-05.
  8. ”கோவையில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை” : 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்! (கலைஞர் செய்திகள்)
  9. தினத்தந்தி (2025-05-05). "தமிழ் வார விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நிறைவு விழா". www.dailythanthi.com. Retrieved 2025-05-05.
  10. "5 தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நாட்டுடைமை: நூல் உரிமை தொகையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்". Hindu Tamil Thisai. 2025-05-06. Retrieved 2025-05-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ரகுமான்&oldid=4395875" இலிருந்து மீள்விக்கப்பட்டது