உள்ளடக்கத்துக்குச் செல்

புதுயுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுயுகம்
இயக்கம்கோபு
சுந்தர்
தயாரிப்புஜி. ராமநாதன்
ஸ்ரீ சாய்ஞானமிருத பிக்சர்ஸ்
கதைகதை கே. எம். ஷெரீஃப்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
எஸ். வி. சுப்பைய்யா
பி. வி. நரசிம்ம பாரதி
ஜி. முத்துகிருஷ்ணன்
கிருஷ்ணகுமார்
எம். எஸ். திரௌபதி
எம். சரோஜா
வெளியீடுசூன் 4, 1954
நீளம்16848 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதுயுகம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்[1]. கோபு மற்றும் சுந்தர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், எஸ். வி. சுப்பைய்யா, பி. வி. நரசிம்ம பாரதி, எம். எஸ். திரௌபதி, கிருஷ்ணகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதை சுருக்கம்[தொகு]

பேராசிரியர் ரகுநாத் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவரின் இளைய சகோதரி செல்லம் ஒரு விதவை. ரகுநாத் தனது மாணவனாகிய சேகருக்கு தனது சகோதரியை மணமுடிக்க திட்டமிடுகிறார். அதனால், சேகரும் செல்லமும் நெருங்கிப் பழகுகின்றனர். அதன் விளைவாக, செல்லம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைகிறாள். ரகுநாத் இதை அறியவில்லை. வியாபாரம் செய்வதற்காக சேகருக்கு, ரகுநாத் தனது வீட்டை அடமானம் வைத்து பண உதவி செய்கிறான். சேகர் வியாபாரத்தில் வளர்ந்தவுடன் பணக்காரப் பெண் சித்ராவை மணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். இதை அறிந்த செல்லம் அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் சேகர் அவளைத் தவிர்க்கிறான். ரகுநாத் தன் தங்கைக்காக சேகரிடம் பேசுகிறான். அப்போதும் சேகர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறான்.

ரகுநாத் செல்லம் கர்ப்பவதி என்று அறிந்து அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். வீடு கடன் கொடுத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. செல்லம், ரகுநாத்தின் மகன் விநோதனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறிய வீட்டில் வசிக்கும் முருகன் மற்றும் வள்ளி இவர்களுக்கு ஆதரவு அளித்தனர். செல்லத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு புஷ்பா எனப் பெயரிடுகிறாள். புஷ்பாவை முருகன் மற்றும் வள்ளியின் பராமரிப்பில் விட்டுவிட்டு செல்லம் வேலை தேடி அலைகிறாள். வயதான தனவந்தரின் பேரன் ராஜாவைக் கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. செல்லம் விநோதனையும் ராஜாவையும் வளர்த்து ஆளாக்குகிறாள். அவர்கள் முறையே மருத்துவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உள்ளனர். புஷ்பா செவிலியராக இருக்கிறாள்.இதற்கிடையில் சேகர் சித்ராவை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறான். செல்லம் சேகரைத் தண்டித்தாளா? அவர்கள் வளர்த்த குழந்தைகளின் நிலை என்னவாயிற்று என்பதுடன் இக் கதை முடிவடைகிறது..[2]

நடிப்பு மற்றும் படக்குழு[தொகு]

பின்வரும் விபரங்கள் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மற்றும் இப் படத்தின் பாட்டு புத்தகம்.[2]

நடிப்பு[தொகு]

படக்குழு[தொகு]

 • தயாரிப்பாளர் : ஜி. ராமநாதன்
 • இயக்குநர்கள் : கோபு, சுந்தர்
 • திரைக்கதை மற்றும் வசனம் : கா. மு. ஷெரிப்
 • ஒளிப்பதிவு : எம். ஆர். புருஷோத்தமன்
 • படத்தொகுப்பு : டி. ஆர். கோபு, ஜி. கல்யாணசுந்தரம்
 • கலை : ஆர். பி. சுப்ரமணியன்
 • ஒலிஅமைப்பு: ஆர். ஜி. பிள்ளை, கே. விஸ்வநாத்
 • ஆடைவடிவமைப்பு: சோப்ரா, மாதவன்
 • தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீ சாய் கானாம்ருதா பிக்‌சர்ஸ்
 • ஆய்வகம்: விஜயா வாகினி ஸ்டுடியோஸ்|விஜயா

தயாரிப்பு[தொகு]

இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கா. மு. ஷெரீப் ஆகியோர் பாடல்களை இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், கண்டசாலா, எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஏ. பி. கோமளா, ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. எஸ். பகவதி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர்
1 பரம்பரை பணக்காரன் போலே டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன் & வி. டி. ராஜகோபாலன் தஞ்சை ராமையாதாஸ்
2 ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா கா. மு. ஷெரீப்
3 கலையே புவியாரைக் கவரும் எம். எல். வசந்தகுமாரி அ. மருதகாசி
4 கண்கள் ரெண்டும் பேசுதே ஏ. பி. கோமளா
5 தவறே புரிந்து பின்னால் ஜிக்கி
6 புது யுகம், புது யுகம் ஜிக்கி & பி. லீலா
7 நைசான ட்யூட்டி டி. எஸ். பகவதி
8 பெண் மதியாலே முன் மதியின்றி
9 காதல் கொண்டு பூவில் வண்டு கண்டசாலா & பி. லீலா
10 கல்யாணம் ஆகுமுன்னே கண்டசாலா & ஜிக்கி
11 வாழ்வினிலே இன்ப சௌபாக்கியம் பி. லீலா

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1954!". 10 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 2. 2.0 2.1 Pudhu Yugam Song Book. Chandirasekaran Press, 3 Perumal Mudali Road, Chennai-14.
 3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 76.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுயுகம்&oldid=3753488" இலிருந்து மீள்விக்கப்பட்டது