கருமுத்து தி. கண்ணன்
கருமுத்து தி. கண்ணன் | |
---|---|
இறப்பு | மே 23, 2023 மதுரை |
பெற்றோர் | கருமுத்து தியாகராஜர், இராதா |
வாழ்க்கைத் துணை | உமா |
கருமுத்து தி. கண்ணன் (இறப்பு: மே 23, 2023) என்பவர் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரும் கல்வித்துறை முன்னோடியுமாவார்.[1] இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராகவும் நிருவாகியாகவும் செயற்பட்டு வந்தார். இவர் கருமுத்து தியாகராஜர், இராதா தம்பதியரின் ஒரே மகனாவார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் இருந்தார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் ஆகவும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டார்.[2] இவரது துணைவியரின் பெயர் உமா. இவர் மதுரை நகர மேம்பாட்டிற்கு பல திட்டங்களுடன் செயல்படுபவர்.[3].
தனது 70 ஆவது வயதில் 2023 மே 23 அன்று உடல் நலக்குறைபாட்டின் காரணமாகக் காலமானார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.[1]
விருதுகள்-கௌரவ பதவிகள்[தொகு]
- பெருந்தலைவர் காமராசர் விருது 2015[4]
- நடுவண் அரசு ஜவுளிக் குழு தலைவர் (Chairman, Textile Committe) [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்". https://www.dinamalar.com/news_detail.asp?id=3328382. பார்த்த நாள்: 23 May 2023.
- ↑ http://india-herald.com/madurai-meenakshi-temple-president-visits-mts-p2406-1.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.maduraimessenger.org/printed-version/2010/august/cover-story-2/.
- ↑ "திருவள்ளுவர் தின விழாவில் விருதுகள் வழங்கும் விழா: தமிழக அரசு சார்பில் இன்று நடக்கிறது". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/28869-.html. பார்த்த நாள்: 23 May 2023.
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1197905.ece மத்திய ஜவுளிக் குழுத் தலைவர் கருமுத்து தி.கண்ணன்