தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தியாகராசர் கலைக்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தியாகராசர் கலைக்கல்லூரி அல்லது தியாகராசர் கல்லூரி என்பது மதுரையில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கருமுத்து தியாகராஜன் என்பவரால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று.

வரலாறு[தொகு]

கருமுத்து தியாகராஜன் செட்டியார் என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய மதராஸ் மாநில ஆளுநரால் (the King of Bhavanagar) தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன.

அமைவிடம்[தொகு]

13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் ராமநாதபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் மையத்தில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

 • திருமதி ராதா தியாகராஜன் - கல்லூரியின் கவுரவத் தலைவர்
 • கருமுத்து தி. கண்ணன் - தலைவர்
 • உமா கண்ணன் - செயலாளர்

துறைகள்[தொகு]

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • பொருளியல்
 • வணிக நிர்வாகம் (Business Administration)
 • வணிகவியல்
 • கணிதம்
 • இயற்பியல்
 • வேதியியல்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • கணினி அறிவியல்

இந்தத் துறைகளின் கீழ் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

பட்டயப் படிப்புகள்[தொகு]

 • சுற்றுலா மேலாண்மை
 • தொழிலக மேலாண்மை
 • காப்பீடு மேலாண்மை
 • சில்லறை வர்த்தக திட்டமிடல்
 • புள்ளியியல்
 • கணினி அறிவியல்
 • மூலக்கூறு அறிவியல் (PG Diploma in Molecular Modeling & Spectroscopy)
 • மருத்துவ தாவரங்கள் பற்றிய படிப்பு
 • மீன்வளர்ப்பு
 • விவசாயம்
 • உணவுப் பொருள் பதப்படுத்துதல்
 • காந்தியச் சிந்தனை (மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் படிப்பு)

இளங்கலை படிப்புகள்[தொகு]

முதுகலைப் படிப்புகள்[தொகு]

புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்[தொகு]

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, திரைப்படம், அரசியல் போன்ற பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். அவர்களில் சிலர்:

அரசு அலுவலர்கள்[தொகு]

அமைச்சர்கள்[தொகு]

கவிஞர்கள்[தொகு]

திரைத்துறையினர்[தொகு]

திரைப்பட இயக்குநர் சிம்புதேவன்

பேராசிரியர்கள்[தொகு]

பேச்சாளர்கள்[தொகு]

பணியாற்றிய தமிழறிஞர்கள்[தொகு]