மதுரை முத்து (நகைச்சுவையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தமிழகத்தின், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தார்.[1][2] இவருக்கு மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி லேகா என்ற வையம்மாள் தனது 32-வது வயதில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார்.[3] பின்னர் சிறுது மாதங்கள் கழித்து, தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.[4]

நிகழ்ச்சிகள்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

  • அகிலன்
  • மதுரை வீரன்
  • சபாபதி படத்தில் கதாநாயகியின் உறவுக்காராக நடித்துள்ளார்
  • குற்றம் குற்றமே

மேற்கோள்கள்[தொகு]

  1. என் முதல் ரசிகை மனைவிதான்… 'மதுரை முத்து' எக்ஸ்க்ளூசிவ் பேட்டி[தொடர்பிழந்த இணைப்பு], ஒன்இந்தியா
  2. "மதுரை முத்துவின் வரலாறு". LakshmanShruthi. http://www.lakshmansruthi.com/profiles-variety/comedy%20artist/madurai-muthu.asp. பார்த்த நாள்: 4 February 2014. 
  3. மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம் தி இந்து தமிழ் 04 பிப்ரவரி 2016
  4. "2வது திருமணம்.. யெஸ், அந்தப் போட்டோ உண்மை தான்.. 4 மாதங்களுக்குப் பின் மனம் திறக்கும் மதுரை முத்து!".

வெளி இணைப்புக்கள்[தொகு]