ராமராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராமராஜன்
பிறப்பு 18 அக்டோபர் 1960 (1960-10-18) (அகவை 57)
மேலூர், சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம் கோடம்பாக்கம், சென்னை,  இந்தியா
தேசியம் இந்தியர்
பணி நடிகர், அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–2001, 2012- தற்போது வரை
அரசியல் கட்சி அதிமுக
பெற்றோர் ராமைய்யா,
வெள்ளையம்மாள்
வாழ்க்கைத்
துணை
நளினி 1987-2000
பிள்ளைகள் அருண் , அருணா

ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2]

திரைப்படத் துறை பங்களிப்புகள்[தொகு]

எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது.

கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர்.

இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

திசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காகத் திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓரப் பேருந்து நிறுத்தத்தில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்குத் தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராமராஜன் ஆளுமைக் குறிப்புகள்".
  2. http://tamil.cinemaprofile.com/actor/ramarajan-tamil-actor-biography-exclusive-online.html#sthash.8BYSUduh.vVbFncGA.dpbs
  3. "Famous Tamil film hero Ramarajan injured in a road accident: Driver killed on the spot". asiantribune. பார்த்த நாள் 18 மார்ச் 2014.
  4. "Actor Ramarajan injured in accident". thehindu. பார்த்த நாள் 18 மார்ச் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமராஜன்&oldid=2492109" இருந்து மீள்விக்கப்பட்டது