ஆர். வி. சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். வி. சுவாமிநாதன் (ஆர்.வி.எஸ்)
R.V.Swaminathan.jpg
முன்னாள் மத்திய இணைஅமைச்சர் / முன்னாள் தமிழக காங்கிஸ்கட்சித்தலைவர்/ சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர் /
தனிநபர் தகவல்
பிறப்பு பாகனேரி இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) தையல்நாயகிமீனாட்சி
பிள்ளைகள் டாக்டர் இந்திரா ராமநாதன், இராஜமார்த்தாண்டன், சாரதா, வசந்தா, நிர்மலா, பத்மினி, ஜெயம், அசோக்குமார், பிரேம்குமார், கிஷோர்குமார்.

ஆர். வி. சுவாமிநாதன் இராமநாதபுரம் மாவட்டம் (சிவகங்கை) பாகனேரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வெள்ளையப்பத்தேவர், முனியாயிஅம்மா அவர்களுக்கு பிறந்தவர். இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு சார்பாக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1971 , 1977 சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1980 இந்திய தேசிய காங்கிரசு சார்பாக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6] இவர் இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவராக இருந்து திறம்படசெயல்பட்டவர். குற்றப்பரைச்சட்டத்தை நீக்குவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிப்பேசியவர். 1961ஆம் ஆண்டு தமிழக முதல்வர் பதவிக்குப்போட்டியிட்டு திரு.பக்தவச்சலம் அவர்களிடம் சொற்பவாக்கில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.1980ஆம் ஆண்டில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய விவசாய இணைஅமைச்சராக பொறுப்பேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வி._சுவாமிநாதன்&oldid=2679597" இருந்து மீள்விக்கப்பட்டது