தா. கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாண்டவன். கிருட்டிணன்
முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு (1937-02-10)பெப்ரவரி 10, 1937
கொம்புக்கரனேந்தல் சிவகங்கை மாவட்டம்
இறப்பு மே 20, 2003(2003-05-20) (அகவை 66)
மதுரை
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) பத்மா
பிள்ளைகள் 1 மகன், 1 மகள்
இருப்பிடம் மதுரை
As of நவம்பர் 20, 2003
Source: [1]

சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.

இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.[1] இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மு. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._கிருட்டிணன்&oldid=3557560" இருந்து மீள்விக்கப்பட்டது