உள்ளடக்கத்துக்குச் செல்

பரவை முனியம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவை முனியம்மா
பிறப்புமுனியம்மா
26 சூன் 1937
பரவை, மதுரை தமிழ்நாடு, இந்தியா
இறப்பு29 மார்ச்சு 2020(2020-03-29) (அகவை 82)

பரவை முனியம்மா (Paravai Muniyamma, 25 சூன் 1943 - 29 மார்ச் 2020) என்பவர் தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள, பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.

திரைப்படத் துறை

[தொகு]

தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார்.[1] காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது.

திரைப்படங்கள்

[தொகு]

தொலைக்காட்சித் தொடர்

[தொகு]

கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[2][1]

பிற நிகழ்ச்சிகள்

[தொகு]

மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.[3]

நிதி உதவி

[தொகு]

பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.[4]

இறப்பு

[தொகு]

இவர் மார்ச் 29, 2020 அன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Throaty treat". Archived from the original on 2004-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-06-27. The Hindu
  2. "Paravai Muniyamma is back".
  3. "Cooking up a smile nuggets from aatha". Archived from the original on 2009-08-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-27. the Hindu
  4. "மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு". தினத்தந்தி
  5. "பரவை முனியம்மா காலமானார்". தினமலர் (மார்ச் 29, 2020)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவை_முனியம்மா&oldid=4050269" இலிருந்து மீள்விக்கப்பட்டது