என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு
என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு | |
---|---|
இயக்கம் | பரணி குமார் |
தயாரிப்பு | ஆரூர் அமுதா |
கதை | பரணி குமார் |
இசை | எஸ். பி. பூபதி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராஜீ வி. கிருஷ்ணா |
படத்தொகுப்பு | வி. அனில் குமார் |
கலையகம் | ஸ்ரீ எஸ். ஆர். என் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 29, 2004 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு 2004 ஆம் ஆண்டு பாண்டியராஜன், சங்கவி, ராதிகா சௌத்ரி , மற்றும் அபிநய ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் பரணி குமார் இயக்கத்தில், எஸ். பி. பூபதி இசையில், குறைந்த பொருட்செலவில் ஆரூர் அமுதா தயாரிப்பில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.[1][2]
கதைச்சுருக்கம்
[தொகு]பால்காரரான பாண்டியன் (பாண்டியராஜன்) தன் மனைவியைப் பிரிந்து தன்னுடைய பாட்டியுடன் (பரவை முனியம்மா) வசித்துவருகிறார். அவன் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசித்துவருபவள் ரேகா (சங்கவி). அவள் பாண்டியனை தன் உறவினரைப் போல் எண்ணி பழகி வருகிறாள். பக்கத்துக்கு கிராமத்தில் வசித்துவரும் பாண்டியனுடைய மாமா மாணிக்கத்தின் (அலெக்ஸ்) இரண்டு மகள்கள் பார்வதி (ராதிகா சௌத்ரி)மற்றும் மீனாட்சி (அபிநயஸ்ரீ). பார்வதி அமைதியான குணமுள்ள பெண். மீனாட்சி முன் கோபமுடையவள்.
சில மாதங்களுக்கு முன்புதான் பாண்டியனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. தன் திருமணக் கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியன் மீனாட்சியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். இதனால் மனமுடைந்த பார்வதி மீனாட்சியை அழைத்துக்கொண்டு தன் தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.
வட்டிக்கு கடன் கொடுக்கும் சொக்கு (பாரதி) மோசமான நடத்தையுடையவன். அந்த கிராமத்தில் பெரும்பாலானோர் அவனால் பாதிக்கப்பட்டவர்கள். அவன் மீனாட்சியை விரும்புவதை அவளிடம் கூற அவளோ அவனை நிராகரிக்கிறாள். ஒரு நாள் தன்னிடம் தவறாக நடக்க முயலும் அவனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறாள் மீனாட்சி
தங்கையை இழந்த பார்வதி மீண்டும் கணவன் வீட்டுக்குத் திரும்புகிறாள். அங்கு தன் கணவனுடன் பழகும் ரேகாவை சந்தேகப்படுகிறாள். அதன் பின் நடக்கிறது என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- பாண்டியராஜன் - பாண்டியன்
- சங்கவி - ரேகா
- இராதிகா சௌத்ரி - பார்வதி
- அபிநயஸ்ரீ - மீனாட்சி
- பரவை முனியம்மா - பாண்டியனின் பாட்டி
- அலெக்ஸ் - மாணிக்கம்
- சாப்ளின் பாலு
- பாலு ஆனந்த் - ரேகாவின் தந்தை
- ஆனந்த் - ராஜா
- பாரதி - சொக்கு
- பவா லக்ஷ்மண் - வைத்தி
- சூர்யகாந்த்
- ஜுபிளீ நடராஜன்
இசை
[தொகு]படத்தின் இசையமைப்பாளர் எஸ். பி. பூபதி. பாடலாசிரியர்கள் முத்துலிங்கம் மற்றும் இளைய கம்பன்.[3]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | பால்காரி | மாணிக்க விநாயகம் | 4:16 |
2 | யம்மா யம்மா | பிரசன்னா, கோபிகா பூர்ணிமா | 4:15 |
3 | ஒன்னு ஒண்ணா | பிரசன்னா, கோபிகா பூர்ணிமா | 4:24 |
4 | ஞானத் தங்கமே | மாணிக்க விநாயகம் | 5:09 |
5 | நாடு சும்மா | பரவை முனியம்மா | 1:40 |
- ↑ "Movie : En Purushan Ethir Veetu Ponnu in KTV". spicyonion.com. Archived from the original on 2017-12-22. Retrieved 2017-12-18.
- ↑ "Enn Purushan Ethir Veettu Ponnu on Fri 09, Jan". tv.burrp.com. Archived from the original on 2017-12-22. Retrieved 2017-12-18.
- ↑ "En Purusan Ethir Veetu Ponnu Songs". saavn.com. Retrieved 2017-12-18.