கீர்த்தி சக்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கீர்த்தி சக்கரா (தமிழ் ஒலிபெயர்ப்பில்: அரண்)
இயக்கம்மேஜர் ரவி
தயாரிப்புஆர். பி. சௌத்திரி
கதைமேஜர் ரவி
இசைஜோஷூவா ஸ்ரீதர்
நடிப்புமோகன்லால்
ஜீவா
கோபிகா
பிரகாஷ் ராஜ்
ரமேஷ் கண்ணா
கொச்சி ஹனீஃபா
பிஜூ மேனன்
லட்சுமி கோபாலசாமி
ஒளிப்பதிவுதிரு
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 7, 2006
நாடுஇந்தியா
மொழிமலையாளம் (முதன்மை) தமிழ் (ஒலிபெயர்ப்பில்)
ஆக்கச்செலவு20 கோடிகள்
[சான்று தேவை]

கீர்த்தி சக்கரா (Keerthi chakra) (மலையாளம்: കീര്‍ത്തിചക്ര) 2006ஆம் ஆண்டு போர்க்களப் பின்னணியில் மேஜர் ரவியின் முதல் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். இதில் மோகன்லாலும் ஜீவாவும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்திய மாநிலம் சம்மு காசுமீரில் உண்மையான போராளிகளின் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது. இந்தியப் படைத்துறை அமைதிகாலத்தில் வழங்கும் உயரிய கீர்த்தி சக்கரம் விருதினைக் கொண்டு திரைப்படம் பெயரிடப்பட்டது. இது மேஜர் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தின் முதல் திரைப்படமாகும். இதனை அடுத்து இதே கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்த குருச்சேத்திரம் வெளியானது.

இந்தப் படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழில் ஒலிபெயர்ப்புச் (டப்) செய்யப்பட்டு அரண் என்று பெயரில் வெளியானது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keerthichakra: commendable". Rediff.com. 2006-08-05. 2009-02-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Keerthi Chakra declared a winner - Malayalam Movie News". IndiaGlitz. 2006-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_சக்கரா&oldid=3685783" இருந்து மீள்விக்கப்பட்டது