மு. க. அழகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மு. க. அழகிரி
M K Alagiri.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 30 சனவரி 1950 (1950-01-30) (அகவை 68)
திருக்குவளை, தமிழ்நாடு
வாழ்க்கை துணைவர்(கள்) காந்தி
பிள்ளைகள் தயாநிதி, அஞ்சுகச்செல்வி, கயல்விழி
As of மே 21, 2013
Source: [1]

மு. க. அழகிரி (பிறப்பு: 30 சனவரி, 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.[1]

இளமைக்காலம்[தொகு]

இவர் தனது தந்தையின் சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார். இவருடைய சகோதரர்கள் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அது முதல் மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்தியசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[சான்று தேவை]

அரசியல்[தொகு]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார்.

குற்றச்சாட்டு[தொகு]

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன், 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது.[2]

கட்சியிலிருந்து நீக்கம்[தொகு]

மார்ச் 25, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் அழகிரி [3]

மேற்கோள்[தொகு]

  1. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=1104
  2. http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=734&ncat=&archive=1&showfrom=5/9/2008 தினமலர்
  3. http://www.seythigal.com/?p=2767

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._அழகிரி&oldid=2476835" இருந்து மீள்விக்கப்பட்டது