உள்ளடக்கத்துக்குச் செல்

இராம் விலாசு பாசுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் விலாசு பாசுவான்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1977, 1980, 1984, 1989, 1996, 1998, 2004, 2014
தொகுதிஹாஜீபூர், பீகார்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
சூலை 2010 [1] – 2014
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்
பதவியில்
மே, 2014 – அக்டோபர், 2020
வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சர்[1]
பதவியில்
23 மே 2004 – 22 மே 2009
பின்னவர்மு. க. அழகிரி
சுரங்கத்துறை அமைச்சர்[1]
பதவியில்
1 செப்டம்பர் 2001 – 29 ஏப்ரல் 2002
முன்னையவர்சுந்தர் லால் பட்வா
தகவல், தொலைத்தொடர்பு அமைச்சர்[1]
பதவியில்
13 அக்டோபர் 1999 – 1 செப்டம்பர் 2001
பின்னவர்பிரமோத் மகஜன்
தொடருந்து அமைச்சர்[2]
பதவியில்
1 சூன் 1996 – 19 மார்ச் 1998
முன்னையவர்சி. கே. ஜாஃபர் ஷெரீஃப்
பின்னவர்நிதிஷ் குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1946 (1946-07-05) (அகவை 78)
கஃகாரியா, பீகார்
இறப்பு8 அக்டோபர் 2020(2020-10-08) (அகவை 74)
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி
துணைவர்(கள்)ரீனா பாசுவான், இராச குமாரி
பிள்ளைகள்சிராக் பாசுவான் (மகன்) மற்றும் 3 மகள்கள்
வாழிடம்(s)கஃகாரியா, பீகார்
As of செப்டம்பர் 14, 2009
மூலம்: [1]

இராம் விலாசு பாசுவான் (Ram Vilas Paswan) (5 சூலை 1946 - 8 அக்டோபர் 2020[3]) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும் ஆவார். எட்டு முறை மக்களவை (இந்தியா) உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சம்யுக்த சோசலிசக் கட்சியில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1969ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் லோகதளம் கட்சி உருவானபோது அதில் இணைந்தார். நெருக்கடி நிலை ஆட்சியை எதிர்த்துக் கைதானார்.1977இல் ஹாஜீபூரிலிருந்து ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000இல் லோக் ஜனசக்தி கட்சியை (LJP) நிறுவி அதன் தலைவராக விளங்கினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கூட்டுச் சேர்ந்து வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் உருக்கு அமைச்சராகவும் பணி புரிந்தார். 2004இல் மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாசுவான் 2009இல் தோல்வியைத் தழுவினார். 2010 முதல் 2014 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பாசுவான் 2014ஆம் ஆண்டு தமது ஹாஜீபூர் தொகுதியிலிருந்து தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக பதினாறாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Rajya Sabha members". National Informatics Centre, New Delhi and Rajya Sabha. Archived from bioprofile the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2013. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)
  2. "List of Minister of Railways of India on Indian Railways Fan Club website". Indian Railways Fan Club. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Ram Vilas Paswan, union minister, passes away". livemint. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "LJP chief Ram Vilas Paswan, son Chirag Paswan win". Daily News & Analysis. 16 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_விலாசு_பாசுவான்&oldid=3635961" இலிருந்து மீள்விக்கப்பட்டது