இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
{{{body}}} இந்திய இரும்புவழி அமைச்சர்
Emblem of India.svg
Flag of India.svg
உறுப்பினர்இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை
நியமிப்பவர்குடியரசுத் தலைவர்
பாரத பிரதமரின் வழிகாட்டுத்தலின் படி

இந்திய இரும்புவழி அமைச்சர் என்பவர் இந்திய இரயில்வே அமைச்சகத்தின் தலைவராக பதவி வகிப்பவர். இந்திய இரும்புவழி அமைச்சர் இந்திய நடுவண் அரசின் ஆய அமைச்சர் ஆவார்.

இருப்புப்பாதை அமைச்சர்களின் பட்டியல்[தொகு]

தொடருந்து அமைச்சர்கள்
பெயர் படம் பதிவிக்காலம் கட்சி குறிப்பு
ஜான் மாத்தாய் 1947 காங்கிரசு (முறையாக இரும்புவழி அமைச்சர் என அறிவிக்கப்படவில்லை) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் இரும்புவழி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்
என். கோபால்சாமி அய்யங்கார் 1948–1952 காங்கிரசு அரசுமயமாக்கப்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை மண்டல இரயில்வேக்களாக சீரமைத்தார்
லால் பகதூர் சாஸ்திரி LBS.jpg 1952–1956 காங்கிரசு தொடருந்துகளின் விபத்துக்கு பொறுப்பேற்று 1956ல் பதவி விலகினார்.
ஜெகசீவன்ராம் 1956–1962 காங்கிரசு
சர்தார் சுவரன் சிங் 1962 காங்கிரசு
கென்கல் அனுமந்தையா அல்லது ராம் சேவ் சிங்? 1967 காங்கிரசு அனுமந்தையா அமைச்சராக இருந்தார் என சில குறிப்புகள் கிடைக்கின்றன, சில குறிப்புகள் ராம் சேவ் சிங் 1966-1968 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தாரென சொல்கின்றன, இவர் ஆய அமைச்சராக இல்லாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
செ. மு. பூனச்சா 1968 காங்கிரசு
பனம்பிள்ளை கோவிந்த மேனன் 1969 காங்கிரசு
குல்சாரிலால் நந்தா 1970–1971 காங்கிரசு கெங்கல் அனுமந்தையா 1971இல் சிலகாலம் அமைச்சராக இருந்திருக்கலாம்
டி. எ. பாய் 1972–1973 காங்கிரசு
லலித் நாராயண் மிசுரா 1973–1975 காங்கிரசு 1975 சனவரி 2 அன்று சமசிதிப்பூரில் இரும்புவழித்தடத்தை தொடங்கி வைக்கும் போது குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
கமலபதி திரிபாதி 1975–1977 காங்கிரசு
மது தண்டவதே 1977–1979 ஜனதா கட்சி
கேடர் பாண்டே 1980–1981 காங்கிரசு
அ. ப. அ. கானி கான் சௌத்திரி (1981?) 1982–1984 காங்கிரசு
பன்சி லால் 1984 காங்கிரசு சில அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் சீரமைக்கப்பட்டபோது சிறிது காலம் பொறுப்பேற்றார்
மாதவ்ராவ் சிந்தியா 1984–1989 காங்கிரசு
ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1989–1990 தேசிய முன்னனி
ஜானேசுவர் மிசுரா 1990–1991 சார் அமைச்சராக சிறிது காலம் இருந்தார்
செ. க. ஜாபர் செரிப் 1991–1995 காங்கிரசு
சுரேசு கல்மாடி 1995–1996 காங்கிரசு
அடல் பிகாரி வாஜ்பாய் Ab vajpayee.jpg 1996 பாஜக 13 நாட்கள் மட்டுமே நீடித்த பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் இத்துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது பிரதமராகவும் இவர் இருந்தார்.
ராம் விலாசு பாசுவான் 1996–1998 லோக் ஜனசக்தி கட்சி
நிதிசு குமார் 1998–1999 ஐக்கிய ஜனதாதளம்
மம்தா பானர்ஜி Mamata Banerjee - Kolkata 2011-12-08 7542 Cropped.JPG 1999–2000 திரிணாமுல் காங்கிரசு முதல் பெண் இரும்புவழி அமைச்சர்
நிதிசு குமார் 2001–2004 ஐக்கிய ஜனதாதளம்
லாலு பிரசாத் யாதவ் Lalu Prasad Yadav addressing the EEC - 2006 (cropped)]] 2004–2009 இராச்டிரிய ஜனதா தளம்
மம்தா பானர்ஜி Mamata Banerjee - Kolkata 2011-12-08 7542 Cropped.JPG 2009–2011 திரிணாமுல் காங்கிரசு மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மே 19, 2011 அன்று பதவியை விட்டு விலகினார்.
முகுல் ராய் 2011 திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மம்தா பானர்ஜி பதவி விலகியதும் இவர் இரும்புவழி அமைச்சராக யூலை 11, 2011 வரை தொடர்ந்தார்.
மன்மோகன் சிங் Prime Minister Manmohan Singh in WEF ,2009.jpg 2011 காங்கிரசு மன்மோகன் சிங், பிரதமர் பதவியுடன் சில காலம் இத்துறையை கவனித்துக்கொண்டார்.
தினேசு திரிவேதி Dinesh trivedi.jpg 2011 - மார்ச்சு 14, 2012 திரிணாமுல் காங்கிரசு 2012-2013 நிதியாண்டுக்கான பயணிகள் தொடருந்து கட்டணங்ளை உயர்த்தியதால் மம்தா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு இவரை நீக்கிவிட்டு முகுல் ராயை இத்துறை அமைச்சராக்கும் படி கேட்டுக்கொண்டார்.
முகுல் ராய் மார்ச் 14, 2012 - செப்டம்பர் 20, 2012 திரிணாமுல் காங்கிரசு திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் இவர் பதவி விலகிவிட்டார். .
மன்மோகன் சிங் Prime Minister Manmohan Singh in WEF ,2009.jpg 2012 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை காங்கிரசு மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் அக்கட்சியின் முகுல் ராய் வகித்த அமைச்சரவை பொறுப்பை இவர் தற்காலிகமாக ஏற்றுள்ளார்.
சி. பி. ஜோசி 2012 செப்டம்பர் 22 - 16 ஜூன் 2013 காங்கிரசு தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான சி. பி. ஜோசி, கூடுதலாக இப்பொருப்பை கவனிப்பார்.[1]
மல்லிகார்ஜுன கார்கே - 17 ஜூன் 2013 - 25 மே 2014 காங்கிரசு
டி. வி. சதானந்த கௌடா - 26 மே 2014 - 9 நவம்பர் 2014 பாஜக
சுரேசு பிரபு
Suresh Prabhu.JPG
10 நவம்பர் 2014 - 3 செப்டம்பர் 2017 பாஜக
பியூஷ் கோயல்
Piyush Goyal.jpg
3 செப்டம்பர் 2017 முதல் – 7 ஜூலை 2021 வரை பாஜக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எனும் நடுத்தர அதிவிரைவுத் தொடர்வண்டி அறிமுகம் செய்யப்பட்டது
அஸ்வினி வைஷ்னவ்
Shri Ashwini Vaishnaw Minister.jpg
7 ஜூலை 2021 முதல் – தற்போது வரை பாஜக முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கவாச் என்னும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவி சோதனைக்கு பின் பயன்பாட்டுக்கு வந்தது

மேலும் பார்க்க[தொகு]

இந்திய இரயில்வே அமைச்சகம் இந்திய இரும்புவழி நிதியறிக்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-26 அன்று பார்க்கப்பட்டது.