ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ மு கூ) இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கும் மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருந்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த 2004 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின், திமுக கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.

குறைந்தபட்ச செயல் திட்டம்[தொகு]

இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன்படி ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.

ஆரம்பகால ஆதரவுகள்[தொகு]

ஆரம்பத்தில் 59 எம்பிக்களை கொண்டிருந்த இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து வழங்கினர். அதில் 39 எம்பிக்களைக் கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி, 4 எம்பிக்களைக் கொண்டிருந்த அஇஅதிமுக, 3 எம்பிக்களை கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 எம்பிக்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் 543 மொத்த எம்பிக்களில் 335 எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தது.

காங்கிரசுடன் கொள்கை முரண்பாடு இருந்த போதிலும், இடது சாரிகள் மதச்சார்பற்ற அரசு தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.[1]

ஆதரவை திரும்பப் பெறுதல்[தொகு]

தெலுங்கானா இராஷ்டிரிய சமிதி[தொகு]

கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல் கட்சி. ஆந்திரப்பிரதேச அரசிலிருந்து முதலில் வெளியேறி அக்கட்சி பின்னர் மத்திய அரசிலிருந்து வெளியேறினார் அதன் தலைவர் சந்திரசேகர ராவ். பின்னர் அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.[2]

மதிமுக[தொகு]

16 மார்ச்சு 2007ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.

பகுஜன் சமாஜ் கட்சி[தொகு]

உபியில் தமது கட்சிக்கு எதிர்த்து வந்த்தைத் தொடர்ந்து 21 சூன் 2008ல் விலகிக் கொண்டது.

இடது சாரிகள்[தொகு]

இந்திய-அமெரிக்க நியூக்லியர் ஒப்பந்ததில் இந்தியா கைசாத்தியதைத் தொடர்ந்து பிரகாஸ் காரத் தலைமையிலான மார்க்சிய கம்யூ கட்சி 8 சூலை 2008ல் ஆதரவை விலக்கிக் கொண்டது.

Jammu and Kashmir Peoples Democratic Party[தொகு]

காங்கிரசின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசிற்கு ஆதரவைத் தொடர்ந்து மஹ்பூபா முப்தி 4 சனவரி 2009ல் தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார்.[3]

பாட்டாளி மக்கள் கட்சி[தொகு]

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக 26 மார்ச்சு 2009ல் பாமக தலைவர் அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தமது கட்சி உறுப்பினர்கள் இருவர் பதவி விலகுவர் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்[தொகு]

12 நவம்பர் 2012ல் தமது ஆதரவை விலக்கிக் கொண்டது.

திருணாமுல் காங்கிரஸ்[தொகு]

சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 18 செப்டம்பர் 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா[தொகு]

`

திராவிட முன்னேற்றக் கழகம்[தொகு]

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பதவி விலக வலியுறுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்டது.

எனினும், 2016ல் மறுபடியும் திமுக கூட்டணியில் இணைந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]