உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எல். என். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. எல். என். கிருஷ்ணன் (01 ஜனவரி 1918 - 2001) தொழிற் புரட்சி காலத்தில் 1960ஆம் ஆண்டில் ஜப்பானில், உலோகப் பொறியியல் துறையில் பயிற்சி பெற்ற மதுரை தொழிலதிபர் ஆவார். ஜெட் பம்பு உற்பத்தி தொழிற்சாலையை, இந்திய அளவில் முதன்முதலாக மதுரையில் நிறுவியவர். மேலும் இரப்பர், இரும்பு மற்றும் வார்படத் தொழிற்சாலைகளையும் அமைத்தவர்.

கல்விப் பணியில்[தொகு]

சௌராட்டிரக் கல்லூரியின் தலைவராக பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியவர். மதுரை சமூக அறிவியல் நிறுவனத்தின் (Madurai Institute of social sciences) தலைவராகவும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கே எல் என் பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவராக 25 ஆண்டுகள் செயல்பட்ட கல்வியாளர்.[1]

பொதுப்பணியில்[தொகு]

மதுரை மாவட்ட சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையாளராக முப்பது ஆண்டுகள் சேவை செய்தவர்.

நிறுவிய கல்வி நிறுவனங்கள்[தொகு]

  1. கே. எல். என். பொறியியல் கல்லூரி
  2. கே. எல். என். தகவல் தொழில்நுட்ப கல்லூரி
  3. கே. எல். என். பாலிடெக்னிக் கல்லூரி [2]
  4. கே. எல். என். பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி[3]
  5. கே. எல். என். வித்தியாலயா (CBSE)

பாராட்டுகள்[தொகு]

  • 1987ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தலைவரிடமிருந்து உத்யோக் பத்ரா சான்றிதழ்
  • காஞ்சி காமகோடி சங்கராச்சாரியிடமிருந்து சர்வலோக சேவா இரத்தினா பாராட்டு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._என்._கிருஷ்ணன்&oldid=3817762" இலிருந்து மீள்விக்கப்பட்டது