செல்லூர் கே. ராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லூர் கே. ராஜூ ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். 2011 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[1] தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] தொடர்ந்து 2016 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (மேற்கு) தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. 2013-04-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. 2011-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லூர்_கே._ராஜூ&oldid=3577311" இருந்து மீள்விக்கப்பட்டது